twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைப் பிரியர்களின் இதயம் தொடும் 'ஒன் ஹார்ட்' - ரஹ்மான் ஸ்பெஷல் எப்படி?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'ஒன் ஹார்ட்'-ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய இசைத் திரைப்படம்-வீடியோ

    சென்னை : திரைப்பட இசை, ஆல்பங்கள், விருதுகள் என்று தொடர்ச்சியாக பல உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய இசைத் திரைப்படம் 'ஒன் ஹார்ட்'.

    ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய கான்செர்ட்டுகள் தொகுக்கப்பட்டு 'ஒன் ஹார்ட்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஹாலிவுட்டில் இந்த பாணியில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்தியாவில் வெளியாக இருக்கும் முதல்படம் இதுதான். இந்தப் படம் இந்தியாவில் கடந்த 7-ம் தேதி வெளியானது.

    கான்செர்ட் தொகுப்பு

    கான்செர்ட் தொகுப்பு

    ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவிலும் , உலக சுற்றுலாவிலும் இடம்பெற்றிருக்கும் பத்து இசைக் கலைஞர்கள் மற்றும் அமெரிக்க நகரங்களில் நடத்தப்பட்ட தமிழ், இந்தி, ஆங்கில இசைக்கச்சேரிகளின் தொகுப்புதான் 'ஒன் ஹார்ட்' படம்.

    வருமானம் யாருக்கு?

    வருமானம் யாருக்கு?

    இப்படத்தின் மூலம் வரும் வருமானம் ஏ.ஆர்.ரஹ்மானை தூதராகக் கொண்ட 'ஒன் ஹார்ட் மியூசிக் பவுண்டேஷன்' மூலம் பாடலாசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள், இசைக்குழுவினர் உள்ளிட்ட அனைவரது குடும்பநல நிதியாகப் பயன்படுத்தப் பட இருக்கிறது.

     அமெரிக்க பாணி

    அமெரிக்க பாணி

    பாப் உலகின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்ஸனின் மியூசிக்கல் ஷோக்கள் அடங்கிய 'திஸ் இஸ் இட்' (This is it) கான்செர்ட் மியூசிக்கல் படத்தின் பாணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொகுத்து தமிழ், இந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில்'கிரேப் வென்சர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'ஒய்எம் மூவிஸ்' பட நிறுவனம் தயாரித்து வெளிவந்திருக்கிறது 'ஒன் ஹார்ட்'.

    இந்தியாவின் முதல் கான்செர்ட் படம்

    இந்தியாவின் முதல் கான்செர்ட் படம்

    இந்தியாவின் முதல் கான்செர்ட் ஃபிலிமாக திரையரங்குகளில் வெளியாகிருக்கும் ஏ.ஆர் ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' இசைத் திரைப்படத்தில்

    'சின்ன சின்ன ஆசை' பாடல் தொடங்கி 'ஊர்வசி , ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி ...' பாடல் வரை தனது திரையிசைப் பாடல்களை தமிழ், இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலத்தில் கச்சேரியாக காட்சிப்படுத்தியிருப்பது அசத்தலாக இருக்கிறதாம்.

    ரஹ்மான் தான் ஹீரோ

    ரஹ்மான் தான் ஹீரோ

    ட்ரெய்லரில் வந்தபடி, முதல் காட்சியில் பெருங்கடலில் வெள்ளைப் படகில் நின்றபடி தன் இசைப் பயணம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் , 14 இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்கும் காட்சிகளிலும் அது பற்றி தன் சகாக்களிடம் விவாதிக்கும் காட்சிகளிலும் வசீகரித்திருக்கிறாராம்.

     பிற நட்சத்திரங்கள்

    பிற நட்சத்திரங்கள்

    பிற நட்சத்திரங்கள் ஏ.ஆர்.ஆரின் டிரம்ஸ் வாசிப்பாளர் ரஞ்சித் பரோட், அன் மரியா கல்குன், ஹரிச்சரண் சேஷாத்ரி, ஜூனிட்டா காந்தி, அனிட்டீ பிலீப், மோகினி டே, கே ஹா ஜெர்மைய்யா, தேவி ராணி நா ஜெய், கார்த்திகேயன் தேவராஜன், சங்கத் அத்தலே, ஷிரஷ் உப்பல்லே, அஷ்வின் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாடகர், டான்ஸர், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரவர் பங்கை அழகாகச் செய்திருக்கிறார்களாம்.

    டெக்னிக்கல் வொர்க் பக்கா

    டெக்னிக்கல் வொர்க் பக்கா

    கண்களைச் சற்றும் உறுத்தாத ஒளிப்பதிவு, மனதிற்கு உற்சாகம் அளிக்கும் 14 ஏ.ஆர்.ரஹ்மானின் அயல்நாட்டு மேடை இசை கச்சேரிகள் என அனைத்தும் அவரது லைவ் இசை நிகழ்ச்சிகளே என்றாலும், தொழில் நுட்பத்தில் குறையேதும் இல்லையாம்.

    தியேட்டர்களில் படத்தைக் காணோம்

    தியேட்டர்களில் படத்தைக் காணோம்

    தமிழ்நாடு முழுவதும் 50 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது 'ஒன் ஹார்ட்'. இப்போது அவற்றில் பல தியேட்டர்களிலும் சில காட்சிகளைத் தூக்கியிருக்கிறார்கள். தற்போது மிகச் சில தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    எல்லா கான்செர்ட்களும் வேணும்

    ஒன் ஹார்ட் ஒரு கனவு போல இருக்கிறது. எல்லா கான்செர்ட்டுகளையும் தரமான டி.வி.டிகளில் பதிவிட்டு வெளியிடலாம்.' என ஒரு இசைப்பிரியர் கூறியிருக்கிறார்.

    புதுமையை வரவேற்போம் :

    இசைப்புயலின் புதுமையான இசைக்காகவே அவரை ரசித்தவர்கள் ஏராளம்.

    ஒவ்வொரு கான்செர்ட்டையும் இசைப்படமாக வெளியிடலாம். புதிய முயற்சைகளை நாங்கள் எப்போதும் வரவேற்போம்' என ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார்.

    புல்லரிப்பு :

    புல்லரிப்பு தருணங்களை வழங்கியதற்காக நன்றி ரஹ்மான் சார். அதிலும் குறிப்பாக 'tera bina' பாடலை நீங்கள் புன்னகையுடன் பாடும்போது சிறப்பான தருணமாக இருந்தது.

    இசை அலைகள் :

    'மீண்டும் ஒருமுறை ஏ.ஆர். ரஹ்மானின், 'ஒன் ஹார்ட்', கான்சர்ட் ஃபில்மை பார்த்தோம். தொடரும் இசை அலைகள் நம்மைக் கரைக்குத் தள்ள, அகண்ட இசைக்கடலோ தனக்குள் இழுக்க எனப் பரவசமான அனுபவம். ஓர் இசைப்புரட்சியாளனின் உலகளாவிய நடைபயணம் அது.' என இசைப்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் குட்டி ரேவதி.

    English summary
    'One Heart' is Music Storm AR Rahman's musical concert film. This film is being collected by AR Rahman's concerts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X