»   »  உலகம் சுற்றிய இசைப் புயல் இப்போது உள்ளூரில்... ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி 'நெஞ்சே எழு'!

உலகம் சுற்றிய இசைப் புயல் இப்போது உள்ளூரில்... ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி 'நெஞ்சே எழு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெஞ்சே எழு என்ற தலைப்பில் புதிய இசை நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்தவிருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.

தமிழில் ரோஜா மூலம் இசைப் பயணத்தைத் தொடங்கிய ரஹ்மான், கடந்த 23 ஆண்டுகளில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நேரமில்லை

நேரமில்லை

சர்வதேச அளவில் புகழ்ப் பெற்ற இசையமைப்பாளராக உள்ள அவருக்கு வெளிநாட்டுப் படங்கள் ஏராளமாகக் குவிகின்றன. தமிழ் சினிமாக்களுக்கு இசையமைக்க நேரம் இல்லாத அளவுக்கு, அவர் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வசித்து வருகிறார்.

இசை நிகழ்ச்சி

இசை நிகழ்ச்சி

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி சென்னையிலும், ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார் ரஹ்மான்.

தனியார் அமைப்பு

தனியார் அமைப்பு

இதனை நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர். ரஹ்மானின் கச்சேரி அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, இசை ரசிகர்களிடம்.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

'இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு , நிகழ்ச்சியின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது.இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு ஆதரவும் , ஊக்கமும் தரும் ரஹ்மான் சாருக்கும் ஏ கே ஆர் ஈவன்ட்ஸ் நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி 'என்று தெரிவித்துள்ளார் நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி.

English summary
Music Director AR Rahman will conduct a music concert in Chennai and Coimbatore in 2016, January.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil