»   »  அமெரிக்காவில் ஏ ஆர் ரஹ்மானின் மெகா தொடர் இசை நிகழ்ச்சிகள்.. 13 நகரங்களில்!

அமெரிக்காவில் ஏ ஆர் ரஹ்மானின் மெகா தொடர் இசை நிகழ்ச்சிகள்.. 13 நகரங்களில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வட அமெரிக்காவின் 13 பெரு நகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14-ம் தேதி வரை தொடர் இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார்.

இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

1992-ல் ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 23 ஆண்டுகளில் நூறுக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான்.

தமிழ், தெலுங்கி, இந்தி, ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ ஆர் ரஹ்மான், இன்று ஹாலிவுட்டிலும் சர்வதேச சினிமாவிலும் பெரிதும் விரும்பப்படும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.

விருதுகளின் நாயகன்

விருதுகளின் நாயகன்

'ஸ்லம் டாக் மில்லியனைர்' படத்துக்காக சிறந்த பாடல் மற்றும் அசல் இசைக்கோர்வைக்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், அந்த ஆஸ்கர் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என தமிழில் பேசி, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தார்.

ஆஸ்கர் விருதுகள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் மிக உயர்ந்த கிராமி, பாஃப்டா மற்றும் கோல்டன் க்ளோப் விருதுகளைப் பெற்றார். நான்கு முறை இந்திய தேசிய விருதுகளையும் வென்றவர்.

பீலே

பீலே

தற்போது, உலக பிரபலமான கால் பந்தாட்ட வீரர் பீலே-வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகின்றது. இந்த படத்துக்கும் ரஹ்மான்தான் இசையமைக்கிறார். இது தவிர மேலும் ஒரு ஹாலிவுட் படத்துக்கும் அவர் இசையமைக்கிறார்.

நான்கு மாதங்கள்

நான்கு மாதங்கள்

இத்தனைப் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஏ.ஆர். ரஹ்மான் இம்மாதம் 21-ம் தேதியில் இருந்து வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை வட அமெரிக்காவில் சுமார் 4 மாத காலம் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

ஏஆர் ரஹ்மான் - ஒரு நெருக்கமான இசைப்பயணம்

ஏஆர் ரஹ்மான் - ஒரு நெருக்கமான இசைப்பயணம்

வட அமெரிக்காவில் உள்ள 13 முக்கிய பெரு நகரங்களில் ‘ஏ.ஆர். ரஹ்மான்-ஒரு நெருக்கமான இசைப் பயணம்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

100 படங்களிலிருந்து...

100 படங்களிலிருந்து...

‘ரோஜா' தொடங்கி இதுவரை 23 ஆண்டுகளாக இசையமைத்துள்ள சுமார் 100 திரைப் படங்களின் சிறந்த பாடல்கள் மற்றும் தனி இசைக் கோர்வைகளை இந்த நிகழ்ச்சிகளின் போது இசைக்க உள்ளனர்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு

5 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது.

வட அமெரிக்காவில் கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் இசைப் பயணம் மேற்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், சுமார் 5 ஆண்டுகளூக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

English summary
Oscar award winner AR Rahman is going to conduct 13 concerts in US from March - June 2015.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil