»   »  அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் நீங்கட்டும்.... ஏ ஆர் ரஹ்மானின் புத்தாண்டு வாழ்த்து!

அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் நீங்கட்டும்.... ஏ ஆர் ரஹ்மானின் புத்தாண்டு வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தாண்டில் அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் நீங்கட்டும் என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு இன்று பிறந்திருக்கிறது.

இந்தப் புத்தாண்டை உலகமே கொண்டாடி மகிழ்கிறது. கலைஞர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளப் பயன்பாடு உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில், மக்கள் தங்கள் மகிழ்ச்சி, புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

AR Rahman's new year wishes

தனது அபிமானிகளுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஹ்மான், அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் போன்றவை நீங்கி உயரிய சிந்தனை, உளத்தூய்மை மற்றும் ஆன்ம திருப்தியை நோக்கி மனிதம் உயரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ள ரஹ்மான், ஆண்டின் இறுதியில் முகமது என்ற ஈரானியப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைக்கப் போகிறார்.

English summary
AR Rahman wished the people for a peaceful new year 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil