பாடகி சுசீலா வைத்த கோரிக்கை... 'வாவ்' சொன்ன இசைப்புயல்... என்னதான் கேட்டாங்க?

ஐதராபாத் : ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள தென்னிந்திய நைட்டிங்கேல் பி. சுசீலா தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இசைபுயல் ஏஆர் ரஹ்மானிடம் இவர் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் மிகுந்த உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்

தென்னிந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் பாடகி பி சுசீலா. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று பாராட்டப்படும் இவர் தற்போது ஐதராபாத்தின் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஏறக்குறைய 70 ஆண்டுகள் இவர் தொடர்ந்து தன்னுடைய பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்தவர்.

கண்ணுக்கு மை அழகு பாடல்

கண்ணுக்கு மை அழகு பாடல்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் கண்ணுக்கு மை அழகு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் பாடகி சுசீலாவுடன் சமீபத்தில் தான் மேற்கொண்ட பேச்சு குறித்து ஏஆர் ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார். பாடகி சுசீலாவிடம் தன்னுடைய 99 பட பாடல்களை பார்த்தீர்களா என்று அவர் கேட்டதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உதவ கோரிய பி.சுசீலா

உதவ கோரிய பி.சுசீலா

தொடர்ந்து பாடல்களின் தெலுங்கு பதிப்பை பார்த்த அவர், திரும்பவும் ரஹ்மானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதேபோல தனது கதையையும் எடுக்க விரும்புவதாகவும் அதற்கு உதவி செய்ய முடியுமா என்றும் அவர் இசைப்புயலிடம் கேட்டதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார்.

உற்சாகமான இசைப்புயல்

உற்சாகமான இசைப்புயல்

இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்று கூறியுள்ள ரஹ்மான், அவர் தன்னுடைய மிகவும் விருப்பத்திற்குரிய பாடகி என்றும் அவர் தன்னுடைய 99 பாடல்கள் குறித்து பாராட்டியது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Recommended Video

மனம் திறந்த AR Rahman | பணம் இல்லாததால் பிச்சை எடுக்க சொன்ன School நிறுவனம் | Oneindia Tamil
விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன்

விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன்

ஒரு பாடகரின் பயணம் குறித்த ஏஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ் விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தியால் டைரக்ட் செய்யப்பட்டுள்ளது. ஈஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் மணிஷா கொய்ராலா, லிசா ரே, ரஞ்சித் பராட் மற்றும் ராகுல் ராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X