யுவன் இசையில் பாடப் போகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்... இருவரும் பேட்மிண்டன் நண்பர்களாம்

சென்னை: இந்த வார இறுதியில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காஃபி வித் காவல் திரைப்படம் வெளியாகவிருந்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த வாரம் வெளிவர இருந்த மூன்று படங்கள் அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

குடும்ப பாடல்

குடும்ப பாடல்

கோவா திரைப்படத்திற்கும் அதில் இடம் பெற்றிருந்த ஏழேழு தலைமுறைக்கும் என்ற பாடலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால் அது எங்கள் குடும்ப பாட்டு போல் அமைந்ததுவிட்டது. அந்த பாடலை எனது சித்தப்பா கங்கை அமரன்தான் எழுதினார். அவர்களது வாழ்க்கையை மையப்படுத்தி எழுதிய அந்தப் பாடலை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாட வேண்டும் என்று வெங்கட் பிரபுதான் முடிவெடுத்தார் என்று யுவன் கூறியிருக்கிறார்.

சினேகன் பேச்சு

சினேகன் பேச்சு

பாடல் வரிகள் பிடித்துவிட்டால் யுவன் சங்கர் ராஜாவே அந்தப் பாடலை பாடி விடுவார் என்று கவிஞர் சினேகன் கூறியிருக்கிறாரே, அது பற்றி பற்றிய கருத்து என்ன என்ற கேள்விக்கு, பொதுவாக நான் கம்போஸ் செய்யும் அனைத்து பாடல்களின் டிராக் பதிப்பை நானேதான் பாடுவேன். அதில் சில பாடல்கள் இயக்குநர்களுக்கு பிடித்துவிட்டால் என்னையே பாடச் சொல்வார்கள். அப்படித்தான் பாடியிருக்கிறேன். இன்னும் சிலர் வேறு பாடகர்களை வைத்து ரெக்கார்ட் செய்யலாம் என்றும் கூறுவார்கள். இரண்டு விதமான சம்பவங்களும் நடந்ததுண்டு என்று யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

அமீன் காத்திருப்பு

அமீன் காத்திருப்பு

ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் கலந்து கொண்டபோது அவருடைய பகுதி நிறைவடைந்தும் அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். காரணம் கேட்டபோது இன்னும் யுவன் சங்கர் ராஜாவுக்கு விருது கொடுக்கப்படவில்லை, அவருக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று கூறினாராம். ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்திலும் யுவனுக்கு இரசிகர் இருக்கிறார் என்று ஒரு நபர் கூறியபோது நானும் ரகுமான் அவர்களும் அவ்வப்போது பேசிக் கொள்வது வழக்கம்.

இருவர் கூட்டணி

இருவர் கூட்டணி

மேலும் நானும் ரகுமான் அவர்களுடைய மகன் அமீனும் ஒன்றாக பேட்மிண்டன் விளையாடுவோம். அவர் இசையமைக்கும் பாடல்களை எனக்கு அனுப்புவார். அதேபோல நானும் இசையமைக்கும் பாடலை அவருக்கு அனுப்புவேன். இப்போது கூட ஒரு படத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட ஆல்பம் ஒன்றிற்காக அவரை ஒரு பாடலை பாடச் சொல்லியிருக்கிறேன். இன்னும் அதனுடைய டிராக் பாடலை அவருக்கு அனுப்பவில்லை. கூடிய விரைவில் எனது இசையில் பாடுவார் என்று யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X