»   »  "மயிலு" வீட்டுக்குப் போன "மான்" !

"மயிலு" வீட்டுக்குப் போன "மான்" !

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

சென்னை : நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் அவரது கணவரான போனி கபூர் பிறந்த நாள் நிகழ்வுகள் இந்த வருடம் நடந்துள்ளது. இதற்காக சில பாலிவுட் பிரபலங்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி தன்னுடைய திரையுலக நண்பர்களுக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாய்ராவுடன் கலந்து கொண்டுள்ளார்.

AR Rahman in sridevi's chennai house

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதற்கும் அவருடைய மனைவியை அழைத்துக்கொண்டு வர மாட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

நடிகை ஷபனா ஆஸ்மி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் மூலம் இந்த நிகழ்வு பற்றித் தெரிய வந்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள செல்ஃபியில் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா, ஷபனா ஆஸ்மி, ஸ்ரீதேவி, போனி கபூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த 'மாம்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக ஏ.ஆர்.ரஹ்மான் ஶ்ரீதேவிக்கு நண்பராக இருக்கிறார்.

English summary
Sridevi's husband Boney Kapoor's birthday celebration was held this year in Sridevi's Chennai home. Music composer AR Rahman participated in this function with his wife Saira.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X