TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
AR Rahman: ஆஸ்கர் விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்த ரஹ்மான்: ஏன் தெரியுமா?
மும்பை: ஆஸ்கர் விருது விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்துள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. அவர் இரண்டு கையில் இரண்டு விருதுகளை வைத்துக் கொண்டு நின்றதை மறக்கத்தான் முடியுமா?
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கி 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாட மும்பை தாராவி பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுகள் பற்றி ரஹ்மான் கூறியிருப்பதாவது,
ஆஸ்கர்
ஆஸ்கர் விருதுகளை வாங்குவதற்கு முன்பு பதட்டமாக எல்லாம் இல்லை. விருது விழாவில் ஒல்லியாக ஷேப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக முதல் நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.
அங்கீகாரம்
ஹாலிவுட்டில் இருக்க ஆஸ்கர் விருது வாங்கியவர் என்ற அங்கீகாரம் கை கொடுத்தது. தற்போது எப்பொழுது என் பெயரை யாராவது ஹாலிவுட்டில் தெரிவித்தாலும் அவர்களுக்கு அது நான் தான் என்று தெரிகிறது.
ஊக்கம்
ஆஸ்கர் விருது, அங்கீகாரம் கிடைத்தது இசையை தாண்டி படங்களை தயாரிக்கவும் எனக்கு ஊக்கம் அளித்தது. கோல்டன் குளோப் விருது விழாவில் நான் பாலிவுட் நடிகர் அனில் கபூர் அருகே அமர்ந்திருந்தேன். எனக்கு அந்நேரம் பார்த்து தாகமாக இருந்தது. நான் போய் ஸ்பிரைட் வாங்கி வருகிறேன் என்று கூறி அனில் கிளம்பினார். அனில் சென்று ஸ்பிரைட் வாங்கி வருவதற்குள் நான் விருதை பெற்றுவிட்டேன் என்றார் ரஹ்மான்.
அனில் கபூர்
இதற்காக நான் ரஹ்மானை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். அவர் விருது வாங்குவதை பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் அவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருவதற்குள் விருதை வாங்கிவிட்டார் என்றார் அனில் கபூர்.