»   »  24 'வெற்றி'யை சூர்யாவுடன் கொண்டாடிய ஏ ஆர் ரஹ்மான்!

24 'வெற்றி'யை சூர்யாவுடன் கொண்டாடிய ஏ ஆர் ரஹ்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

24 படத்தின் வெற்றியை படத்தின் நாயகன் சூர்யாவுடன் கொண்டாடினார் ஏ ஆர் ரஹ்மான்.

சூர்யா தயாரித்து நடித்த படம் 24. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூலில் குறை வைக்கவில்லை என்கிறார்கள்.


AR Rahman, Surya celebrate 24 success

வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல ஆதரவு தந்தனர் தமிழ் ரசிகர்கள். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பும் நல்ல வசூலைப் பெற்றதால், படத்தின் வெற்றியை தன் மனைவி ஜோதிகாவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டிக் கொண்டாடினார் சூர்யா.


இப்போது அமெரிக்காவிலிருந்து திரும்பிய கையோடு சென்னையில் பெரிய விருந்து வைத்து 24 வெற்றியைக் கொண்டாடினர். இதில் சூர்யாவுடன் இயக்குநர் விக்ரம் குமார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


24 படத்தின் வெற்றி தந்த உற்சாகத்துடன் அடுத்து சிங்கம் 3 படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் சூர்யா. இந்தப் படப்பிடிப்பு விசாகப்பட்டணத்தில் நடக்கிறது.

English summary
Suriya is back from his holiday in US. As soon as the actor reached India, he had arranged for a private success bash for his team at 2D Entertainment for the overwhelming positive reviews and steady box office collections of ‘24’. Along with Suriya, 24’s director Vikram Kumar and music composer, Rahman too have attended the success party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil