ஷாருக்கான் – அட்லீ படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இவர் தான்

மும்பை : கடந்த 3 ஆண்டுகளாக இந்தியில் ஷாருக்கான் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க போவதாக கூறப்படும் படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

ஷாருக்கான் தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அட்லீ - ஷாருக்கான் இணையும் படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இரட்டை வேடத்தில் ஷாருக்கான்

இரட்டை வேடத்தில் ஷாருக்கான்

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். கடந்த 2 இரண்டுகளாக ஷாருக்கானும் - அட்லீயும் பலவிதமான கதைகளை ஆலோசித்து, இறுதியாக தாங்கள் இணையும் படம் ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் முடிவு செய்து, இந்த கதையை ஓகே செய்தனராம்.

உளவுத்துறை அதிகாரியாக ஷாருக்

உளவுத்துறை அதிகாரியாக ஷாருக்

இந்த படத்தில் ஷாருக்கான் இந்திய உளவுத்துறையில் துப்பறியும் அதிகாரி மற்றும் அதிகம் தேடப்படும் குற்றவாளி என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இந்த இரண்டு கேரக்டர்களை சுற்றி தான் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மீண்டும் அட்லீ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

மீண்டும் அட்லீ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஷாருக்கான், அட்லீ இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க போகிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். தற்போது இது உறுதியானால் மூன்றாவது முறையாக இருவரும் கூட்டணி அமைப்பார்கள்.

ஷாருக்கான் - இசைப்புயல் கூட்டணி

ஷாருக்கான் - இசைப்புயல் கூட்டணி

இதே போன்று ஷாருக்கான் நடித்த உயிரே படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதற்கு பிறகு 2018 ல் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் போது ஷாருக்கான் அணிக்காக உருவாக்கப்பட்ட பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X