»   »  'விஜய் 62' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை... உறுதிப்படுத்திய படக்குழு!

'விஜய் 62' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை... உறுதிப்படுத்திய படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் விஜய்-62 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ

சென்னை : விஜய் - முருகதாஸ் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் 'விஜய் 62'. இவர்கள் சேர்ந்து எடுத்த 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற படங்கள் மாஸ் ஹிட்டானவை.

தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில், படக்குழுவினர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் விஜய் 62 படத்திற்கு இசையமைக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

விஜய் 62

விஜய் 62

விஜய் நடிக்க, அட்லி இயக்கிய 'மெர்சல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி' ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

ஆகையால், இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கவிருக்கிறார்.

படத்தொகுப்பாளர்

படத்தொகுப்பாளர்

'சோலோ' புகழ் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இசை ஏ.ஆர்.ரஹ்மான்

இசை ஏ.ஆர்.ரஹ்மான்

இந்நிலையில், 'விஜய் 62' படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

English summary
'Vijay 62' will be directed by AR Murugadoss. Vijay's 62nd film is to produced by 'Sun Pictures'. In this situation, Team has confirmed that, AR Rahman is to compose for Vijay 62.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X