அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா.. பீஸ்ட் படத்தில் எந்த இடத்தில் வருது தெரியுமா? லீக்கான தகவல்!

சென்னை: விஜய்யின் அசுரத்தனமான ஆக்‌ஷன் காட்சிகளில் வெளியான பீஸ்ட் டிரைலர் 24 மணி நேரத்திற்குள் 30 மில்லியன் ரெக்கார்டை படைத்து டிரெண்டாகி வருகிறது.

பீஸ்ட் டிரைலரை பார்த்த ரசிகர்கள், இத்தனை களேபரங்களுக்கு நடுவே அந்த அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் எப்போ எந்த இடத்தில் வரும் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த இரு பாடல்களும் எப்போது வரும் என்பது தொடர்பாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

கூர்கா 2

கூர்கா 2

பீஸ்ட் டிரைலர் வெளியான நிலையில், ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் இந்த படம் கூர்கா படத்தின் காப்பி என்றும், மணி ஹெய்ஸ்ட் படத்தின் பாதிப்பு என்றும் கமெண்ட் செய்து ட்ரோல் செய்தனர். கூர்கா 2 ஹாஷ்டேக்கையும் யோகி பாபு மற்றும் விஜய்யை வைத்து ஏகப்பட்ட மீம்களையும் போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும், மால் காப், டை ஹார்ட், செக்யூரிட்டி, சனாக் என ஒரு பெரிய இன்வேஷன் த்ரில்லர் படங்கள் மற்றும் ஹெயிஸ்ட் படங்களின் பட்டியலையே வெளியிட்டு வருகின்றனர்.

பீஸ்ட்டில் 3 பாடல்கள்

பீஸ்ட்டில் 3 பாடல்கள்

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை போலவே பீஸ்ட் படத்திலும் இயக்குநர் நெல்சன் மொத்தமாகவே 3 பாடல்களை மட்டுமே வைத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா மற்றும் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளில் இடம்பெறும் "Meaner.. Leaner.. Stronger" என மொத்தம் 3 பாடல்கள் தானாம்.

அரபிக் குத்து எப்போ வரும்

அரபிக் குத்து எப்போ வரும்

ஷாப்பிங் மாலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சந்திக்கும் முதல் காட்சியிலேயே அரபிக் குத்து பாடல் வரும் என தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. டாக்டர் படத்தில் சோ பேபி பாடல் இடம்பெற்றதை போலவே ஹலமதி ஹபிபோ பாடல் இடம்பெறும் என்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு

சர்கார் உள்ளிட்ட விஜய் படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளின் போது ஒளிபரப்பாகும் பாடல் போல பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் உருவாகி உள்ள "Meaner.. Leaner.. Stronger" பாடல் மாண்டேஜாக இடம்பெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. டிரைலரை பார்க்கும் போது அது அந்த இடத்தில் தான் வரும் என்பது தெளிவாக தெரிகிறது.

Recommended Video

திருநெல்வேலி: 'பீஸ்ட்' ட்ரைலர் பார்த்த குஷியில்... தியேட்டரில் சீட்டுக்களை உடைத்த விஜய் ரசிகர்கள்!
ஜாலியோ ஜிம்கானா

ஜாலியோ ஜிம்கானா

டாக்டர் படத்தில் படம் முடியும் போது செல்லம்மா செல்லம்மா பாடல் எப்படி இடம்பெற்றிருந்ததோ அதே சேம் பேட்டர்னில் தான் ஜாலியோ ஜிம்கானா பாடல் படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பீஸ்ட் படத்தின் கதை ஷாப்பிங் மால் ஹைஜாக் தான் என தகவல்கள் வெளியானதை உறுதி செய்யும் விதமாக டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், டாக்டர் மேஜிக்கை பீஸ்ட்டிலும் நிகழ்த்த நெல்சன் முயற்சித்துள்ளார் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X