நோ Valentine's day...ஒன்லி அரபிக்குத்து டே... இன்று மாலை வெளியாகிறது அரபிக்குத்து வீடியோ

சென்னை : பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்கத்து பாடல் இன்று வெளியிடப்பட உள்ளதால், ட்விட்டர் முழுவதிலும் அரபிக்குத்து போஸ்டரை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரை மிரள வைத்து வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், கிங்ஸ்லே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார்.

காதலர் தினத்தில் அரபிக்குத்து

காதலர் தினத்தில் அரபிக்குத்து

இந்நிலையில் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல், காதலர் தின ட்ரீட்டாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இருப்பது போலவும், விஜய் போனில் பேசுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடலை விஜய் பாட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. விஜய் இருப்பது போல் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்படும் எனவும் தகவல் பரவியது.

அரபிக்குத்து ஸ்பெஷல் போஸ்டர்

அரபிக்குத்து ஸ்பெஷல் போஸ்டர்

ஆனால் ப்ரோமோவிற்கு பதிலாக நேற்று மாலை அரபிக்குத்து ஸ்பெஷல் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதோடு அரபிக்குத்து பாடலை அனிருத் தான் பாடி உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோனிதா காந்தி பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் லிரிக் வீடியோ வெளியாகி விட்டதாக கூறப்பட்டது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

அரபிக்குத்து பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருவதால், பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அரபிக்குத்து ப்ரோமோ வெளியானதில் இருந்தே #ArabicKuthu ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டது. நேற்று முதலே #Beast ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இன்று அரபிக்குத்து டே

இன்று அரபிக்குத்து டே

இந்நிலையில் இன்று காலை முதல் ArabicKuthuFromToday என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இதில் விஜய் ரசிகர்கள், Today Valentine's day என்பதை அடித்து விட்டு, ArabicKuthu day என அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் மாஸ்டர் பட ஃபஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதை மிஞ்சும் அளவிற்கு அரபிக்குத்து வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X