»   »  லேடி சூப்பர்ஸ்டார் கெத்து காட்டிய படம்.. தெலுங்கிலும் ரிலீஸ்!

லேடி சூப்பர்ஸ்டார் கெத்து காட்டிய படம்.. தெலுங்கிலும் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
லேடி சூப்பர்ஸ்டார் கெத்து காட்டிய படம்..தெலுங்கிலும் ரிலீஸ்!- வீடியோ

ஐதராபாத் : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் 'அறம்'. ஜே ராஜேஷ் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவானது இந்தப் படம்.

சமூகத்திற்கு தேவையான கருத்தைச் சொல்லும் கதையம்சம் கொண்ட இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையையும் படைத்தது. அதோடு, நயன்தாராவுக்கும், இயக்குநர் கோபி நயினாருக்கும் சிலபல விருதுகளையும் பெற்றுத் தந்தது 'அறம்'.

Aramm to be release in telugu on March 16

நீர் அரசியல் பேசும் இப்படத்தில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா எவ்வாறு போராடி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் கதை. கடைக்கோடி கிராம மக்கள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கொள்ளை கொண்ட இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் 'கர்தவ்யம்' என்னும் பெயரில் அறம் படத்தின் டீசர் தெலுங்கில் வெளியானது. இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து வரும் மார்ச் 16-ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் நடத்திய ஸ்ட்ரைக் தமிழகத்தில் மட்டுமே இன்னும் தொடர்கிறது. மற்ற மாநில திரையுலகம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்து ஸ்ட்ரைக்கை நிறுத்திவிட்டன. இதனால், மார்ச் 16-ம் தேதி 'அறம்' ரிலீஸ் ஆக இருக்கிறது.

English summary
Lady Superstar Nayanthara starred 'Aramm' became hit last year. This movie has attracted audiences in Tamil and is now will be released in Telugu too. 'Aramm' team decided to release the film on March 16, titled as 'Kardavyam'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil