twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அறம் - ஆர்பரிக்கும் மக்கள்... அதிரடி வசூல்!

    By Shankar
    |

    நூற்றாண்டு கொண்டாடிய தமிழ் சினிமாவில் அரசியல் பேசிய படங்கள் ஏராளம். எம்ஜிஆர், சிவாஜி முதல், ரஜினி, கமல், விஜய், விஷால் வரை தங்கள் படங்களில் அரசியல் பேசியிருக்கிறார்கள். இவை அனைத்தும் அந்தந்த நடிகர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள பேசிய அரசியல்.

    கோபி நயினார் இயக்கத்தில் வெள்ளிக் கிழமை ரீலீஸ் செப்யப்பட்டுள்ள 'அறம்' உலக அரசியல், உள்ளுர் அரசியல் பேசுகிறது. கதைக்குள் திரை நட்சத்திரங்களை நடிக்க வைத்து அரசியல் அதகளமாடியிருக்கிறது அறம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை 120 கோடி இந்திய மக்களுக்கான அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர் கோபிநயினார்.

    Aramm box office

    திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் கோபி நயினார், அதிகார அத்துமீறலுக்கும், அரசியல்வாதிகளின் பாராமுகத்துக்கும், ஆட்சியாளர்களின் வேட்டைக்கும் வாக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் இந்திய மக்கள் எல்லோருக்காகவும் அறம் தவறாத அரசியல் பேசியிருக்கிறார் 'அறம்' படத்தில்.

    வெள்ளிக்கிழமை 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அறம் ரீலீஸ் ஆனது. முன்னணி நாயகர்களுடன் அரைகுறை ஆடையில் நடித்திருக்கும் நயன்தாரா இப்படத்தின் கதை நாயகி. இயக்குநர் கோபிநயினார் புதியவர். படத்திற்கு எந்த தியேட்டரிலும் நயன்தாராவுக்காக கூட பெரிய ஒபனிங் இல்லை என்பதே உண்மை.

    ஆனால் வெள்ளிக் கிழமை காலைக்காட்சி முடிந்தவுடன் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசியபோது, "அறம் தாமதமாக ஆர்ப்பரிக்கும் பயப்பட வேண்டியதில்லை," என்றார்கள். படம் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள் வேகமாக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டன. அனைத்து கருத்துகளும் விமர்சனங்களும் அறம் படம் பற்றி அறம் தவறாது இருந்தன.
    .
    மக்கள் அரசியல் பேசிய படத்திற்கு இதுவரை சமூக வலைத்தளங்கள் நேர்மையான கருத்துக்களை பதிவு செய்ததில்லை. அறம் அதற்கு விதிவிலக்காக இருந்தது. முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்திற்கு குறைவாக மொத்த வசூல் ஆன அறம் படத்தின் இரண்டாம் நாள் வசூல் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை அதிர வைத்தது.

    குத்துப் பாட்டு, அதிரடி சண்டைக் காட்சி, ஹீரோயிசம் இவை எதுவும் இல்லை என்றாலும் மக்களுக்கான, மக்கள் அரசியல் பேசும் நேர்மையான படங்களை நாங்கள் ஆதரிப்போம் என்பதை இரண்டாம் நாள் வசூல் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள். முதல் நாள் தமிழ்நாட்டில்மொத்த வசூல் 50 லட்சத்திற்கு குறைவு. இரண்டாம் நாள் 1 கோடியே 48 லட்சம். மூன்றாவது நாளும் இதே வசூல் தொடர்ந்தது. படத்தின் முதலீட்டை எடுத்துவிட்டார்கள் மூன்றாவது நாளில்.

    மக்களுக்கான சினிமா என்றும் வெல்லும் என்பதை 'அறம்' நிருபித்திருக்கிறது.

    -ஏகலைவன்

    English summary
    Aram has picked up in box office and collected its investment in the third day of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X