»   »  நயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துபோனேன்..! - 'அறம்' ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

நயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துபோனேன்..! - 'அறம்' ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துபோனேன்..! - 'அறம்' ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்- வீடியோ

சென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான 'அறம்' திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அறம் படத்தின் உருவாக்கமும், காட்சிகளின் ஒளிப்பதிவாக்கமும் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றன.

எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேற்றி அதன் தீவிரத்தைக் கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும்.

'அறம்' படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவைப் பாராட்டாதவர்களே இல்லை என்று கூடச் சொல்லலாம். இந்நிலையில், 'அறம்' படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பேசியிருக்கிறார்.

 ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள்

ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள்

"எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று 'அறம்'. இப்படத்தின் கதையை முதல்முறையாகக் கேட்ட போதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையைச் சித்தரிக்க 'க்ரே' கலரை பயன்படுத்தி, அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

 நயன்தாராவின் சேலை கலர்

நயன்தாராவின் சேலை கலர்

'க்ரே' கலருக்கு ஏற்ற வகையில் நயன்தாராவின் ஆடையும் வடிவமைக்கப்பட்டது. வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தைக் கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்யேக லென்ஸை பயன்படுத்தினேன்.

 நயன்தாராவுடன் பணிபுரிவது

நயன்தாராவுடன் பணிபுரிவது

நயன்தாராவுடன் நான் இணைந்து பணிபுரிவது இது மூன்றாவது படம். 'ஆரம்பம்', 'காஷ்மோரா' படங்களுக்கு பிறகு இப்படத்தில் நயன்தாராவுடன் பணியாற்றியுள்ளேன் . அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாட்டைக் கண்டு அசந்துள்ளேன்.'

 பெருமையைக் கொடுத்துள்ளது

பெருமையைக் கொடுத்துள்ளது

'அறம்' கதையின் மேல் இயக்குனர் கோபி நயினார் வைத்திருந்த நம்பிக்கையும் அவரது எழுதும் தான் இப்படத்தை இவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளது. வார்த்தைகளால் சொல்லமுடியாத திருப்தியையும் பெருமையையும் 'அறம்' படம் எனக்கு கொடுத்துள்ளது". என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் ஓம் பிரகாஷ்.

English summary
Nayanthara starring Gopi Nainar's 'Aramm' movie received wide acclaim. Creation of the film and the cinematography of the scenes also received acclaim for the audience. Cinematographer Om Prakash has spoken about 'Aramm' and Actress Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil