»   »  ஹன்சிகா அதிரடி + ஹிப்ஹாப் இசை அடி.. ரெண்டுமே மாஸ்.. 'அரண்மனை 2' "பாஸ்"!

ஹன்சிகா அதிரடி + ஹிப்ஹாப் இசை அடி.. ரெண்டுமே மாஸ்.. 'அரண்மனை 2' "பாஸ்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் ஹாரர்+காமெடி கலந்து உருவாகி இருக்கும் அரண்மனை 2 இன்று உலகம் முழுவதும் சுமார் 1௦௦௦ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இதில் சுந்தர் சியுடன் இணைந்து சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


2014 ம் வருடம் வெளியாகி வசூலைக் குவித்த அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அரண்மனை 2 ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா? பார்க்கலாம்.


கண்டிப்பா பிளாக்பஸ்டர்

"ஹன்சிகாவோட ஆரம்பமே அதிரடியா இருக்கு அரண்மனை 2 கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான்" என்று ஹன்சிகாவின் அசத்தல் என்ட்ரியோடு ட்வீட்டியிருக்கிறார் ஏஞ்சல் ஹன்சிகா.


ஹிப்ஹாப் தமிழா

"அரண்மனை 2 ஹிப்ஹாப் தமிழாவோட இசை வேற லெவல்ல இருக்கு, 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன்" என்று மகேஷ் கூறியிருக்கிறார்.


முதல் பாதி

"அரண்மனை 2 முதல் பாதி செமையா இருக்கு" என்று அனுபவித்துக் கூறியிருக்கிறார் சிறுத்தை சிவா.


நல்ல பொழுதுபோக்கு

அரண்மனை 2 முதல் பாதி முடிந்தது. நல்ல பொழுதுபோக்கு படத்தை திகிலான திரைக்கதையுடன் கொடுத்திருக்கின்றனர். வண்ணமயமான பாடல்களுடன் வெளியாகி இருக்கும் அரண்மனை 2 திரைப்படத்தை பார்க்கலாம்" என்று படத்திற்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார் சஜிதரன்.


இனிமே பேய் வருமோ

"அரண்மனை 2 - த்ரிஷா வின் கிளாமர் ,சூரி காமெடி இடைவேளை வரையில் காப்பாத்தி இருக்கு. இனி பேய் வந்து காப்பாத்துமோ?" என்று சந்தேகமாக கேட்டிருக்கிறார் தரணி.


மொத்தத்தில் சுந்தர்.சியின் பேய் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றி இருக்கிறது அரண்மனை 2.English summary
Siddharth, Trisha and Hansika Starrer Aranmanai 2 Today Released Worldwide - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil