»   »  கொள்ளை கும்பலை சேர்ந்தவராக அறந்தாங்கி நிஷா... அடுத்து படம் முழுக்க வரும் கேரக்டர்!

கொள்ளை கும்பலை சேர்ந்தவராக அறந்தாங்கி நிஷா... அடுத்து படம் முழுக்க வரும் கேரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அறந்தாங்கி நிஷா கொள்ளை கும்பலை சேர்ந்தவரா

சென்னை : அறந்தாங்கி நிஷா தற்போது டிவி சேனல் நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஸ்டாண்ட் அப் காமெடியில் வெளுத்து வாங்கும் அவரைப் பெரும்பாலானோருக்கும் தெரியும்.

இவர் ஜீவா, ஜெய், சிவா நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய 'கலகலப்பு 2' படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

இதனையடுத்து, தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் 'மாரி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் அறந்தாங்கி நிஷா.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

தற்போது டிவி சேனல் நிகழ்ச்சிகளில் கலக்கிகொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது எனும் அளவுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தன்னை கேலி செய்யும் விதமாக யார் பேசினாலும் பதிலுக்கு கலாய்த்து அப்ளாஸ் அள்ளுவார்.

கலகலப்பு 2 படத்தில்

கலகலப்பு 2 படத்தில்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் 'கலகலப்பு 2' படத்தில் அறந்தாங்கி நிஷா நடித்திருக்கிறார். இப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா.

கொள்ளை கும்பலை சேர்ந்த பெண்

கொள்ளை கும்பலை சேர்ந்த பெண்

'கலகலப்பு 2' படத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவராக சிவாவின் ஆட்களில் ஒருவராக நடித்திருக்கிறார் நிஷா. விலை மதிப்புமிக்க வைரத்தை திருடும் முயற்சியில் சிவாவுக்கு நிஷாதான் உதவி செய்வார்.

மாரி 2 படத்திலும்

மாரி 2 படத்திலும்

இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்திலும் நடிக்கிறாராம் நிஷா. தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் 'மாரி 2' படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு படம் முழுக்க வரும் படியான கதாபாத்திரமாம்.

English summary
Aranthangi Nisha is currently doing TV channel shows. She has acted in 'kalakalappu 2' directed by Sundar.C. In this film, she plays as the thief gang person. After that, Nisha will be played in 'Maari 2' with dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil