Just In
- 40 min ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 5 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 5 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 6 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா!

சென்னை: பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக கோபமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.
பொள்ளாச்சியில் 200க்கும் அதிகமான பெண்களை மிரட்டி கும்பலொன்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புள்ள கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவும் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிஷா வீடியோ:
‘நாங்க பொம்பளையா பொறந்துட்டோம். போராடி பார்ப்போம்' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர், "இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள்.

மீண்டும் கள்ளிப்பால்:
இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டிய காலம் திரும்பி விடும். ஏனென்றால் 10 , 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவர்.
நீயெல்லாம் ஒரு தாயா?
குற்றவாளி ஒருவரின் தாய் அளித்த பேட்டியைப் பார்த்தேன். நீயெல்லாம் ஒரு தாயா..மூதேவி. செட்டப் செய்து அழுகின்ற குரலா அப்பெண்ணுடையது. பாதிப்பு, தவிப்பு, நம்பிக்கைத் துரோகம் என அந்தக் குரலில் உண்மையான பரிதவிப்பு உங்களுக்குத் தெரியவில்லையா?

இது தான் தீர்வு:
போராட்டங்கள் நடத்துவது இதற்கு தீர்வாகாது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒன்று சேர்பவர்கள் தங்களது எதிர்ப்பை வரும் தேர்தலில் காட்ட வேண்டும். தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.