»   »  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'.. சின்னத்திரைக்கு வருகிறாரா அரவிந்த் சாமி?

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'.. சின்னத்திரைக்கு வருகிறாரா அரவிந்த் சாமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை, நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்கப்போவதாக கூறப்படுகிறது.

மேல் நாட்டுப் பாணியில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கி நடத்தி வந்தது.

Aravind Swamy in Neengalum Vellalam Oru Kodi

இந்நிகழ்ச்சியின் முதல் பாகத்தை நடிகர் சூர்யாவும், 2 வது பாகத்தை நடிகர் பிரகாஷ் ராஜும் தொகுத்து வழங்கியிருந்தனர்.

முதல் 2 பாகங்களைத் தொடர்ந்து 3 வது பாகத்தை விஜய் டிவி தற்போது கையிலெடுத்து உள்ளது.இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, ஸ்டைலிஷ் வில்லனாக அப்படத்தில் மிரட்டியிருந்தார்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை விடவும், அரவிந்த் சாமியின் நடிப்பே ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.தமிழில் 'போகன்' இந்தியில் 'டியர் டாட் போன்ற படங்களில் தற்போது அரவிந்த் சாமி பிஸியாக நடித்து வருகிறார்.

English summary
Sources Said Aravind Swamy Host in Vijay Tv's Neengalum Vellalam Oru Kodi Part 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil