»   »  ரோஜா நாயகன் அரவிந்த் சாமி பிறந்த நாள் இன்று

ரோஜா நாயகன் அரவிந்த் சாமி பிறந்த நாள் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1991 ல் இருந்து 1998 வரை தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த் சாமியின் 48 வது பிறந்த நாள் இன்று. 1967 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி சென்னையில் பிறந்தவர் அரவிந்த் சாமி. அன்றைய காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துன்பங்களிற்கு ஆளானார்கள். மாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது.

இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார்.

Aravind Swamy Turns 48

தமிழ் சினிமாவின் ஆணழகன் என்று வர்ணிக்கப்பட்ட இவர் தொடர்ந்து நடித்த பம்பாய், இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட நான்கு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 2013ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் இயக்கத்தில் கடல் படம் மூலம் குணச்சித்திர நடிகராக காலடி பதித்திருக்கும் அரவிந்த்சாமி,தற்பொழுது தமிழில் தனி ஒருவன் மற்றும் இந்தியில் டியர் டாட் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரவிந்த்...

English summary
Today Actor Aravind Swamy 48 th birthday. Arvind Swamy is an Indian film actor who has featured in Tamil, Malayalam, Telugu and Hindi language films. He was introduced as an actor by Mani Ratnam in the drama film Thalapathi (1990).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil