தலைவர் 170-ல் இணையும் சிம்பு பட இளம் நாயகி… வில்லன் ரோலுக்கு தளபதி பட நடிகரா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற தகவல்கள் அனைத்துமே நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தலைவர் 170 படத்தில் நடிக்கும் இளம் நடிகை யார் என்பது குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

தலைவர் 170 பூஜை

தலைவர் 170 பூஜை

ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளார். தலைவர் 170, தலைவர் 171 என இரண்டு படங்கள் குறித்த தகவல் நாளை (நவ 5) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ரஜினியின் 170வது படத்தின் இயக்குநர், அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் மட்டும் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தலைவர் 170 பட பூஜை நடக்கும் முன்னரே, அந்தப் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இளம் நாயகி

இளம் நாயகி

தலைவர் 170 படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அவர் கூறிய கதையை தான் ரஜினி முதலில் ஓக்கே செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ஹீரோ, மாநாடு படங்களில் நடித்திருந்த மலையாளம் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி பட நடிகர்

தளபதி பட நடிகர்

மேலும், ரஜினியுடன் இன்னொரு முக்கியமான நடிகரும் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த அரவிந்த் சாமி, அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் ஹேண்ட்சம் ஹீரோவாக கலக்கி வருகிறார். இப்போது வில்லனாகவும் மிரட்டி வரும் அரவிந்த் சாமி, தலைவர் 170 படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகைப்புயலும் இணைகிறார்?

வைகைப்புயலும் இணைகிறார்?

இதனிடையே இந்தப் படத்தில் வைகைப்புயல் வடிவேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வைரலாகின. அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் ரஜினி - வடிவேலு கூட்டணி கன்ஃபார்ம் எனவும் சொல்லப்படுகிறாது. சந்திரமுகி, குசேலன் படங்களில் காமெடியில் கதிகலங்க வைத்த இந்த காம்போ, தலைவர் 170 படத்திலும் இணைந்தால் செம்மையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சன் பிக்சர் தயாரிப்பில், நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் ரஜினி, விரைவில் அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தலைவர் 170ல் இணையவுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X