»   »  மனைவியை பிரிந்த சல்மான் கானின் தம்பி அர்பாஸ்: அடப்பாவமே, இது தான் காரணமா?

மனைவியை பிரிந்த சல்மான் கானின் தம்பி அர்பாஸ்: அடப்பாவமே, இது தான் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானும், அவரது மனைவியும்-நடிகையுமான மலாய்க்கா அரோராவும் பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

சல்மான் கானின் மூத்த தம்பியும் நடிகருமான அர்பாஸ் கானும், அவரது மனைவியும் நடிகையுமான மலாய்க்கா அரோராவும் பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் பேச்சாக

கிடந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

இதற்கிடையே மலாய்க்கா தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

விவாகரத்து

விவாகரத்து

அர்பாஸும், மலாய்க்காவும் தாங்கள் பிரிந்துவிட்டதாக கூட்டாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து மேலும் யாரும் பேச வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்

கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பிரிந்துவிட்டது உறுதியாகிவிட்டது.

அர்பாஸ்

அர்பாஸ்

அர்பாஸுக்கும், மலாய்க்காவும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவர்கள் பிரிந்துள்ளனர். அர்பாஸால் பாலிவுட்டில் ஜொலிக்க முடியாத காரணத்தால் தான்

மலாய்க்கா கடுப்பாகி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

காத்திருப்பு

காத்திருப்பு

அர்பாஸ் சல்மானின் நிழலில் இல்லாமல் பாலிவுட்டில் தனக்கு என ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று மலாய்க்கா விரும்பினாராம். இதற்காக அவர் ஆண்டுக்கணக்கில்

காத்திருந்தது தான் மிச்சம் என்பதால் இனியும் வேலைக்கு ஆகாது என்று அவர் சென்றுவிட்டாராம்.

காரணங்கள்

காரணங்கள்

மலாய்க்காவுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவர் அர்பாஸை பிரிந்து சென்றதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் மலாய்க்காவின் படாடோப வாழ்க்கை கான் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அர்பாஸை மலாய்க்கா பிரிந்தது தான் சரி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

English summary
Salman Khan's brother Arbaz Khan and Malaika Arora have announced that they are parting ways after being married for 18 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil