பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்.. செம டிவிஸ்ட் போங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
அடுத்த சில வாரங்களில் வேல்முருகன் வெளியேற சச்சி வைல்டு கார்ட் என்றியாக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு சுரேஷ், சுச்சி, சம்யுக்தா, சனம் என வாரம் தோறும் ஒருவராக வெளியேறினர்.

டபுள் எவிக்ஷன்
இந்நிலையில் கடந்த வாரம் எதிர்பாரதவிதாமாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் நிஷா வெளியேற்றப்பட்டார்.

குறைந்த எண்ணிக்கை
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 10ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசஸில் ஆரி, அர்ச்சனா, ரியோ, அனிதா, சோம், ஆஜித், ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

டேஞ்சர் ஸோனில்
இவர்களில் அர்ச்சனா, சோம், ஆஜித் ஆகிய மூவரில் நிச்சயம் ஒருவர் வெளியேறுவது உறுதி என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். வாக்குகள் அடிப்படையில் ஆஜித்தும் அர்ச்சனாவும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்பட்டது.

வெளியேறப்போவது யார்?
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நாளைய எபிசோடு இன்றே காட்சியாக்கப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சனா வெளியேற்றம்
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

நிம்மதி பெருமூச்சு
இதனால் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனாக அர்ச்சனா தேர்வானார். இதனால் அடுத்தவாரம் நம்மை யாரும் நாமினேட் செய்ய முடியாது என ஆனந்த கண்ணீருடன் நிம்மதி பெருமூச்சு விட்டார் அர்ச்சனா.

இப்போ இல்லாட்டி எப்போவும் இல்ல
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அடிக்கடி தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார். குறிப்பாக ஆரியை ரொம்பவே மோசமாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்போது இல்லாவிட்டால் எபோதும் இல்லை என நினைத்த மக்கள் இந்த வாரம் அவரை அடித்து தூக்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











