Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கன்னாபின்னாவென கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்.. டிவிட்டரில் இருந்தே ஓட்டம் பிடித்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: டிவிட்டரில் ரசிகர்கள் மோசமாய் திட்டி தீர்த்ததால் கடுப்பான பிக்பாஸ் பிரபலம் டிவிட்டரில் இருந்தே வெளியேறியுள்ளார்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்றவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஏற்கனவே ரியோ, நிஷா, சோம் என இருந்த குரூப்பில் சேர்ந்த அர்ச்சனா அந்த குரூப் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அன்பால் ஜெயிப்பேன்
அன்பால் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ணுவேன் என்று சூளுரைத்த அர்ச்சனா, அன்பு நிச்சயம் ஜெயிக்கும் எனக்கூறி தனக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தார். அதோடு தனது கேங்கையே ஆரிக்கு எதிராய் திருப்பி விட்டார்.

திட்டும் நெட்டிசன்ஸ்
அர்ச்சனா வெளியேறிய பிறகும் அவரது கேங்கை சேர்ந்தவர்கள் ஆரி மீது வன்மத்தைக் காட்டி வருகின்றனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் அர்ச்சனாவை இன்னமும் சமூக வலைதள பக்கத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஆரிக்கு நல்ல எடிட்டிங்
இதனை பார்த்த அர்ச்சனா தங்களின் அன்பு கேங்கை விஜய் டிவி தவறாக காட்டிவிட்டதாகவும், ஆரிக்கு மட்டும் பாஸிட்டிவாக எடிட்டிங் செய்துள்ளதாகவும் கூறினார். இதை பார்த்தும் விளாசி தள்ளினர் நெட்டிசன்கள்.

ஓட்டம் பிடித்த அர்ச்சனா
இதனால் கடுப்பான அர்ச்சனா டிவிட்டரில் இருந்தே ஓட்டம் பிடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த அன்பினால் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன். வெறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற எனக்கு சோர்வாக உள்ளது.
|
குட் பை டிவிட்டர்
இதனால் நான் டிவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன். எனது வெறுப்பாளர்கள் இதனை கொண்டாட தயாராகுங்கள். ஆனால் நான் மீண்டும் இதைவிட வலுவாக முன்னேறுவேன். இனிமேலாவது நீங்கள் கேலியும் கிண்டலும் செய்வதற்கு அடுத்த நபரை கண்டுபிடியுங்கள். குட் பை டிவிட்டர் என பதிவிட்டுள்ளார் அர்ச்சனா.