For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா?

  |

  சென்னை: 'அன்பு', 'அன்பு'ன்னு அர்ச்சனா அக்கா பேசியதும், யாருடா அந்த 'அன்பு' பிக் பாஸ் வீட்டில் அந்த பெயரில் யாருமே இல்லையே என ரசிகர்கள் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

  லவ் பெட், அன்பை பொழிகிறவள், நீ எனக்கு புள்ளை மாறி டா என சொல்லும் அர்ச்சனா, இப்படி பாலாஜியின் கையில் பச்சைக் குத்தி இருக்கும் அவரது கேர்ள் ஃபிரெண்ட் பெயரை எல்லாம் காட்ட சொல்வது ரொம்பவே மோசமான செயல்.

  ஷிவானி நாராயணனை நம்பவில்லை என பாலாவின் வாயாலே சொல்ல வைத்து செம ஸ்கோர் செய்து விட்டார் அர்ச்சனா.

  இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்!

  அமைதிப் புயல்

  அமைதிப் புயல்

  நிவர் புயலை கூட தாங்கிடலாம் போல இருக்கு, இந்த அமைதி புயல் அர்ச்சனாவை கடப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கு. நீங்க பொய்யா நடிக்கிறீங்க என்று சொல்லும் பாலாஜியிடம் மெய்யான பாசத்தைக் காட்டினாலே அவர் ஆஃப் ஆகிடப் போறாரு, மறுபடியும் மறுபடியும் அவரை குத்திக் குடைந்தால், வெடித்துக் கொண்டு தான் வருவார்.

  யார் அந்த அன்பு

  யார் அந்த அன்பு

  அர்ச்சனா பேசும் போது ஒவ்வொரு முறையும் அன்பு.. அன்புன்னு சொல்றாரே யார் அந்த அன்பு என்றும், வடசென்னை தனுஷை தான் அர்ச்சனா சொல்றாரா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

  கொளுத்திப் போட்ட பிக் பாஸ்

  கொளுத்திப் போட்ட பிக் பாஸ்

  இதுவரை இல்லாத அளவுக்கு கஸ்டமர் கேர் டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் வேற லெவலில் கொளுத்திப் போட்டுள்ளார். முதல் காலே பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் தான் வரும் என ஷிவானி கணித்த ஆருடன் அப்படியே நிஜமாக, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஒரு கேவலமான வார்த்தைப் போர் நடந்து ரசிகர்களை சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

  பாலா கையில்

  பாலா கையில்

  பாலாவிடம் விளக்கம் கேட்கிறேன் என பேச ஆரம்பித்த, எப்படியாவது பாலாவை போன் கட் பண்ண வைக்க வேண்டும் என்பதற்காக, எல்லை பர்சனலாக தாக்க முடிவு செய்தார். பாலாஜி முருகதாஸின் கையில் பச்சைக் குத்தி இருக்கும் அவரது உண்மையான காதலியின் பெயரை வெளியே காட்ட சொன்னார். ஆனால், பாலா அதை காட்டவில்லை.

  ஷிவானியை நம்பல

  ஷிவானியை நம்பல

  இந்த வீட்டிலேயே யாரை நீங்க நம்புறீங்க பாலா என அர்ச்சனா அடுத்த அம்பை ஏவினார். உடனே பாலாஜி ஷிவானியின் பெயரை சொன்னார். ஷிவானியை 90 சதவீதம் நம்புகிறேன் என பாலா சொன்னதை பிடித்துக் கொண்ட அர்ச்சனா, 10 சதவீதம் ஏன் நம்பலை எனக் கேட்டு, அருகே இருந்த ஷிவானியிடம் நல்லாவே கொளுத்திப் போட்டார்.

  சோமசேகர் சொன்ன பொய்

  சோமசேகர் சொன்ன பொய்

  யாரை எல்லாம் நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன் என சொல்லுங்க பாலா என அர்ச்சனா அழகாக ஆரம்பிக்க, ரொம்ப கூலா பாலாவும் சோமசேகர், ரியோ ராஜ், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், கேபி என ஒவ்வொரு பெயராக அடுக்கினார். அர்ச்சனா உடனே, சோமசேகர் என்னை நாமினேட் பண்ணார், அவரை முன்னிறுத்தி நான் எப்படி கேம் ஆட முடியும் எனக் கேட்டதுக்கு, அவன் பொய் சொன்னான் என பேச, சோமசேகருக்கும் பாலாவுக்கும் தனியாக ஒரு சண்டை வெடித்தது.

  அர்ச்சனா அவுட்

  அர்ச்சனா அவுட்

  பாலாவை டார்ச்சர் செய்ய எந்த எல்லைக்கும் சென்று அர்ச்சனா கேள்வி கேட்ட நிலையில், ஏகப்பட்ட கேள்விக்கு பாலா பதில் சொல்லவில்லை என்றாலும், கடைசி வரை போனை கட் செய்யாமல் பேசி, அர்ச்சனாவை அவுட் ஆக்கி விட்டார். இப்படி எல்லாம் சண்டையை மூட்டி விடுறது, அப்புறம் கமல் வந்து, நீங்க பண்ணது அது தப்பு, இது தப்புன்னு சமரசம் பண்ண வேண்டியது. நாமினேட் செய்யப்பட்டேன் என்கிற போர்டுடன் அர்ச்சனா அழைவது கைதிக்கு போர்டு போட்டது போல இருக்கிறது.

  இரண்டு ஸ்டார்

  இரண்டு ஸ்டார்

  பாலாஜி முருகதாஸ் அர்ச்சனா இடையே நடந்த கேவலமான கஸ்டமர் கேர் போன் கால் சண்டைக்கு பாலாவுக்கு அர்ச்சனா 2 ஸ்டார்கள் கொடுத்தார். இன்னும் 2 ஸ்டார்கள் சேர்த்துக் கொடுத்து இருக்கலாம் என பாலா சொன்னதற்கு, வேண்டும் என்றால் 2 தண்ணி பாட்டில் எக்ஸ்ட்ரா தருவாங்க என சூப்பரான கமெண்ட் வந்தது.

  English summary
  Archana and Balaji Murugadoss phone conversation goes wrong in Bigg Boss customer care task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X