Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்கடா அந்த அன்பு? ரியோவிடமே எகிறும் அர்ச்சனா.. இந்த வாரத்துல இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கோழிப்பண்ணையாக இந்த வாரம் பிக் பாஸ் வீடு லக்சரி டாஸ்க்கிற்காக மாறியுள்ளது.
குள்ள நரிகள் ஆரியை அட்டாக் பண்றாங்க.. புரமோவால் டென்ஷனான நெட்டிசன்ஸ்!
ரியோவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதும், அனிதா அர்ச்சனாவுக்கு ஏதோ சொல்வதும், பாலாவிடம் ரியோ பேசுவதுமாக மூன்றாவது புரமோ அமைந்துள்ளது.

அன்பு செத்துப்போச்சு
பிக் பாஸ் வீட்டில் அன்பு என்கிற அஸ்திரத்தை வைத்துக் கொண்டு இதுவரை அர்ச்சனா சேஃப் கேம் ஆடி வந்தார். கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷையும், நிஷாவையும் வெளியே அனுப்பி விட்டு, அன்பு ஜெயிக்கும், ஆனால், அன்பை அஸ்திரமாக்கி விளையாடுபவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்த நிலையில், இப்போ அந்த அன்பு எங்க போச்சுன்னே தெரியல.

நரியும் கோழியும்
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் கதை கேள்விப் பட்டிருக்கிறோம் இது என்னடா புதுசா நரியும் கோழியும் என்பது போல இந்த வார பிக் பாஸ் லக்சரி டாஸ்க் அமைந்துள்ளது. தங்க முட்டை வாத்து மட்டுமல்ல கோழியும் போடும் என்றும், நரியோட வாலை பிடித்தாலே நரி காலி என்பது போல செம வித்தியாசமாக ஸ்க்ரிப்ட் யோசிச்சு இருக்காங்க.. எப்படி இருந்தாலும் சண்டை மூட்டி விடத்தான் டாஸ்க் அது கச்சிதமாக நிறைவேறும்.

அதிரடி காட்டிய ஆரி
எதிர்பார்த்தபடியே அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் இடையே இரண்டாவது புரமோவில் சண்டை நடக்கிறது. சிங்கம் சூர்யா போல ஆவூன்னா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்து பார்க்குறியா.. பார்க்குறியா.. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்பது போல அட்ராசிட்டி பண்றாரு ஆரி. ஆனால், அவரது அதிரடி அர்ச்சனாவிடம் பலிக்குமா? இல்லையா? என்பதை ஷோவில் பார்ப்போம்.

ரியோவிடம் எகிறும் அர்ச்சனா
முதலிலே சொன்னது போல, அன்பு எங்கே தொலைந்து போனது என்று தெரியவில்லை. ரியோவிடம் கொஞ்சம் கொஞ்சமாக கடுப்பு காட்டி வந்த அர்ச்சனா, இப்போ நீங்க சொல்றதை எல்லாம் கேட்க முடியாது என சீறுகிறார். இதுவரை அர்ச்சனாவின் நிழலில் இருந்து வந்த ரியோவுக்கு இது தேவை தான். அனிதாவிடம் எகிறுவது போல அர்ச்சனாவிடம் ரியோ கூடிய விரைவில் எகிறுவாரா என்பதை பார்ப்போம்.

என்ன பேசிக்கிறாங்க
அர்ச்சனாவுக்கு ஆஜீத் நாமினேஷனுக்கு விளக்கம் சொன்னது போல, கடைசியா ரியோவும் பாலாவும் என்ன பேசிக்கிறாங்கன்னே புரியல. சமாதானமா பேசுவது போலவும், பாலாவிடம் விளக்கம் கேட்பது போலவும் ரியோ பேசுகிறார். பாலாவும் குரலை தாழ்த்தி அவருக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, நானும் அதைத் தானே சொல்கிறேன் என்றார். ஆனால், கடைசியில் ரியோ கொடுக்கும் பஞ்ச் பிரச்சனையாக இருக்கிறது. இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு செம சரவெடி காத்துக் கொண்டிருப்பது நிச்சயம்.

அனிதா என்ன சொல்லிருப்பாங்க
புரோமோவில் பேசும் வசனங்களே புரியாத படி எடிட்டர் இன்னைக்கு கண்டபடி கட் பண்ணியுள்ளார். ஆனால், இதில் அனிதா அர்ச்சனாவிடம் சொல்வதை மட்டும் மியூட் போட்ட நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும், அனிதா ஏதோ பிளான் பண்ணி அர்ச்சனாவை ரியோவிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறார் என பேச ஆரம்பித்து விட்டனர். இருக்கு இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு!