Just In
- 23 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 31 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 51 min ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
- 1 hr ago
ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
- Lifestyle
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Sports
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய வீரர்களை சென்னைக்கு அனுப்பாத இங்கிலாந்து.. மாஸ்டர் பிளான்!
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனா.. கட்டியணைத்து லிப்லாக் கொடுத்து வரவேற்ற கணவர்.. க்யூட் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது கணவர் கட்டியணைத்து லிப்லாக் கொடுத்து வரவேற்ற வீடியோ தீயாய் பரவி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பிளாக் அண்ட் பிளாக்கில் மாஸ்டர் நாயகி.. அசந்துபோன ரசிகர்கள்!
அதனை தொடர்ந்து 10 நாட்கள் கழித்து முதல் வைல்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா

சர்ச்சைகளில் அர்ச்சனா
பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பேன், அன்புதான் ஜெயிக்கும் என்ற தாரக மந்திரத்தோடு தனக்கென ஒரு குரூப்பை உருவாக்கிக் கொண்டு விளையாடி வந்தார் அர்ச்சனா. இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். தன்னுடைய அன்பை தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்தார்.

ஆரியுடன் சண்டை
ஆரம்பத்தில் இருந்தே அவருக்கும் ஆரிக்கும் பிடிக்காமல் இருந்தது. தனது அன்பு சென்ட்டிமென்டால் பலரையும் வீழ்த்திய அர்ச்சனாவின் யுத்தி ஆரியிடம் பலிக்கவில்லை. இதனால் ஆரியுடன் எப்போதும் அர்ச்சனாவுக்கு ஏழாம் பொருத்தமாய் இருந்து வந்தது.

ஆரி குறித்து பேச்சு
எப்போதும் அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதை மட்டுமே வேலையாய் வைத்திருக்கிறார். அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கிறார் என ஆரி குறித்து சக ஹவுஸ்மேட்ஸிடம் பேசி வந்தார் அர்ச்சனா.

அதிக விமர்சனம்
அனைத்து டாஸ்க்குகளில் முழு ஈடுபாட்டுடன் விளையாடிய அர்ச்சனா, அவ்வப்போது சக போட்டியாளர்கள் மத்தியில் அவர்களுக்கு பின்னால் தகாத வார்த்தைகளையும் பேசினார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.

நியாயம் இல்லை
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேறியபோது நியாயம் இல்லை என்று கூறிய ரசிகர்கள் அர்ச்சனா வெளியேற்றத்தின் மூலம் நிம்மதியடைந்தனர்.

கதறியழுத அர்ச்சனா
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அர்ச்சனா தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அவருக்கு அவரது தாய், மகள், தங்கை, கணவர், செல்ல நாய் சிம்பா என அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்த்த அர்ச்சனா கட்டியணைத்து கதறியழுதார்.

லிப்லாக் முத்தம்
தொடர்ந்து தனது கணவரை கட்டியணைத்த அர்ச்சனா அவரது கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு அவரது கணவரும் அர்ச்சனாவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார். தொடர்ந்து கேக் கட்டிங், மகளோடு கொண்டாட்டம் என அர்ச்சனாவின் வெல்கம் வீடு வீடியோ வேற லெவலில் உள்ளது.