Just In
- 6 min ago
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 22 min ago
சம்பளம் குறைத்து நடித்த படம்.. மார்ச் 4-ல் ரிலீஸ் ஆகிறது நயன்தாராவின் மிரட்டும் த்ரில்லர்!
- 28 min ago
'இதுக்கு முன்னால சீரியசா கண்டுக்கமாட்டாங்க..' அந்த இயக்குனர், ஹீரோவை பாராட்டும் பிரபல டைரக்டர்!
- 32 min ago
பாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு? மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ் டைட்டில் தான் ஓடுது போல?
Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Automobiles
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- News
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நரியா இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும்.. முட்டையை எடுத்த ஆரியை அசிங்கமாய் பேசிய அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் முட்டையை தொட்ட ஆரியை அர்ச்சனா தரக்குறைவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் டாஸ்க்கின் முதல் ரவுண்டில் கோழியாக இருந்த பாலாஜி, இரண்டாவது சுற்றில் தனது முட்டைய பாதுகாப்பதாக கூறி முட்டையின் மீது அமர்ந்து முட்டையை உடைத்தார் பாலாஜி.

நிறைய சம்பவங்கள்
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முட்டை டாஸ்க் தொடர்ந்தது. இதற்கான புரமோக்களே காலை முதல் பட்டையை கிளப்பின. அதனை பார்த்த ரசிகர்கள் இன்று நிறைய சம்பவங்கள் இருக்கு என கூறி வந்தனர்.

ஆரியும் பாலாஜியும்
இந்நிலையில் இன்றைய டாஸ்க்கின் முதல் ஷிவானி மற்றும் ரியோ கோழிகளாக இருந்தனர். அப்போது ரியோவின் முட்டையை ஆரியும் ஷிவானியின் முட்டையை பாலாஜியும் எடுத்தனர்.

ஆரியிடம் வாக்குவாதம்
ஆனால் ரியோவின் முட்டையை அனிதாதான் முதலில் தொட்டதாக கூறி அனிதா ஆர்க்யூ செய்தார். அவருக்கு ஆதரவாய் அர்ச்சனா, ரம்யா ஆகியோரும் ஆரியிடம் வாக்குவாதம் செய்தனர்.

அன்ஃபேர் கேம்
தாங்கள் தான் டீலிங்கில் இருந்தோம், எதையுமே சொல்லாமல் ஆரி எப்படி வந்து முட்டையை தொடலாம் என கேட்டு பிரச்சனை செய்தனர். தொடர்ந்து ஆரி அன்ஃபேராக விளையாடுவதாக கூறினார் அனிதா.

ஆட்டிட்யூட் காட்டிய ரம்யா
ரம்யாவும் அர்ச்சனாவும் வெரி ஃபேர் ஃபேர் என கைகளை தட்டி ஆரியை வெறுப்பேற்றினர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அர்ச்சனா, சோம், ரியோ, கேபி ஆகியோர்.

மானம் இருக்கணும்
அப்போது அங்கு வந்த ஆரியிடம் அர்ச்சனா, நாங்கதான் டீலிங் பேசி வச்சுருந்தோம். முதலில் அனிதா அடுத்து ரம்யா என்று நீங்கள் ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார். மேலும் நரியாய் இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும் என்றும் கூறினார்.

மானம் ரோஷம் இல்லை
இதனைக் கேட்ட ஆரி, கடுப்பாகி எனக்கு மானம் ரோஷமெல்லாம் இல்லை என்றார். ஆனால் அர்ச்சனா அதையெல்லாம் காதில் வாங்காமல் சாப்பிட்டப்படியே கேஷ்வலாஎ எழுந்து சென்றுவிட்டார்.

வாடிக்கையாகிவிட்டது
அர்ச்சனா இப்படி பேசியதை பார்த்த ரசிகர்கள் இதற்கு கமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4ல் தரக்குறைவான வார்த்தைகளும் தகாத வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.