For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் வீட்டின் புது ஜோசியர்.. போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கிய பாலா.. இந்த முறையும் ஜீரோவா?

  |

  சென்னை: கடந்த இரு வாரங்களாக லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சொதப்பல் ஆட்டம் ஆடி, ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியிலும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

  பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

  ஆனாலும், அவரை இரண்டு பேர் மட்டுமே எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வார்கள், அது வேறு கதை.

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில், பாலாவை புது ஜோசியரான அர்ச்சனா அக்கா பங்கமாக கலாய்த்துள்ளார்.

  ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம்

  ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4க்கு ஸ்க்ரிப்ட் எழுதுபவர்கள் ரொம்பவே பக்தி பழமாக இருப்பார்கள் போல தெரிகிறது. இந்த முறை அந்த ஐடியாவை கடைசி வரை விட மாட்டேன் என ஒற்றைக் காலில் நின்று கொண்டு வார வாரம் ஒரு போட்டியாளரை ஜோசியராக்கி வருகின்றனர்.

  இந்த வாரம் யார்?

  இந்த வாரம் யார்?

  ஆஜீத், வேல்முருகன், சுரேஷ் தாத்தாவை தொடர்ந்து இப்போ நம்ம அர்ச்சனா அக்காவை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் ஜோசியராக்கி, டிவி செட்டப்பில், ஒவ்வொரு போட்டியாளருக்குமான ராசி பலன்களை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதை மூன்றாவது புரமோவில் ஒளிபரப்பி உள்ளனர்.

  பழைய சிம்புவோ

  பழைய சிம்புவோ

  சோறு தான் முக்கியம் என டிசர்ட் போட்டுக் கொண்டு ரியோ ராஜ் சுற்றி வரும் நிலையில், தூக்கம் தான் முக்கியம் என பாலாஜி முருகதாஸ் போர்வையில் போர்த்திக் கொண்டு எவன் எக்கேடு கெட்டா எனக்கு என்ன தூங்குவதை முந்தைய புரமோவில் காட்டி இருந்தனர். சிம்புவே இப்போ சூப்பரா மாறி பிரம்ம முகூர்த்தத்தில் எல்லோரையும் எந்திரிக்க வைத்து டீசரை ரிலீஸ் பண்ணி செம ஸ்பீட் ஆகிட்டார். நீங்க இன்னும் பழைய சிம்புவாகவே இருந்தா எப்படி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  இந்த முறையும் ஜீரோவா

  இந்த முறையும் ஜீரோவா

  இந்த முறையும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை செய்யாமல், படுக்கையில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து உறங்கும் பாலாவை பார்த்தால், இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட்டும் ஜீரோ தான் போல என ராசி பலன் சொல்வது போல, அர்ச்சனா அக்கா தனது பயத்தையும், பாலாவின் சோம்பேறி தனத்தையும் பங்கம் பண்ணிய புரமோ வைரலாகி வருகிறது.

  ஏமாத்தும் நிஷா

  ஏமாத்தும் நிஷா

  ஐந்தரை மணிக்கு எந்திரிக்க சொன்னா, ஏழரை மணிக்கு எந்திரிச்சு வந்து, இப்போதான் ஐந்தரை மணி ஆகுதுன்னு நிஷா பொய் சொல்லுவா என முடியை பிடித்து சண்டை போட்ட நிஷாவையும் டாஸ்க் பெயரிலே வச்சு விளாசி விட்டுள்ளார் அர்ச்சனா. நிஷாவின் அந்த பர்பார்மன்ஸுக்கு அர்ச்சனா தரப்பில் இருந்து சீக்கிரமே பயங்கர இடி இறங்கும் என்றே தோன்றுகிறது.

  இந்தா வச்சுக்கோ

  இந்தா வச்சுக்கோ

  3வது புரமோவின் கடைசியா ஜித்தன் ரமேஷ், இந்த வாரம் இறங்கி ஏகப்பட்ட டாஸ்க்குகளை செஞ்சி, நானும் பிக் பாஸ் போட்டியாளர் தான்பா ஆடியன்ஸ் கிடையாது என சொல்வது போல தன்னை நிரூபித்துள்ளார் என்றும், ரமேஷை எங்கடா ஆளே காணோமே என கேட்டவர்களுக்கு, இந்தா வச்சுக்கோ என கெத்துக் காட்டி கலக்குகிறார் என்றார் அர்ச்சனா.

  உளரிட்டாரோ

  உளரிட்டாரோ

  எங்கடா இந்த ஆள் கண்ணுலயே காணோமே என ரசிகர்கள் நினைத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால் நாம் தான் ஒரு மணி நேர நிகழ்ச்சியை பார்க்கிறோம். 24 மணி நேரமும் கூடவே இருந்து பார்க்கும் அர்ச்சனாவுக்கும் எப்படி அது தோன்றுகிறது என்பது தெரியவில்லை. ஒரு வேளை உளரிட்டாரோ.. யார் சொன்னாலும் நம்பாதீங்க, பிக் பாஸ் கண்டிப்பா ஸ்க்ரிப்ட் இல்லை!

  English summary
  Archana trolls Balaji Murugadoss sleeping and not participating in tasks during Bigg Boss horoscope task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X