சனமை கெட்ட வார்த்தையால் திட்டிய அர்ச்சனா.. அடிக்கடி மியூட் பண்றாங்களே.. கடுப்பாகும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியை நேற்று அர்ச்சனா கெட்ட வார்த்தையால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பல கன்டெண்டுகள் எடிட் செய்யப்பட்டு வருகிறது.

பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் பட்டத்தை வென்றார் என்று கூறிய காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை.

மறைக்கப்படும் காட்சிகள்

மறைக்கப்படும் காட்சிகள்

இதேபோல் போட்டியாளர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், பிஸிக்கல் வயலென்சில் ஈடுவடுவதும் மறைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஏதாவது ஒரு தருணத்தில் அந்த சம்பவங்கள் எப்படியோ மக்களுக்கு தெரிய வந்து விடுகிறது.

கெட்ட வார்த்தை பேசும் அர்ச்சனா

கெட்ட வார்த்தை பேசும் அர்ச்சனா

அந்த வகையில் இந்த சீசனில் அர்ச்சனா கெட்ட வார்த்தையால் பேசுவதும், அவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் போது ஆடியோ மியூட் செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே பாலாஜியுடனான பிரச்சனையின் போது அர்ச்சனா கெட்ட வார்த்தையை பேச அது மியூட் செய்யப்பட்டது.

சனம் குறித்து கெட்டவார்த்தை

சனம் குறித்து கெட்டவார்த்தை

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மீண்டும் அர்ச்சனா கெட்ட வார்த்தை பேசியதும், அதை நிகழ்ச்சிக் குழு மியூட் பண்ணியதும் தெரியவந்தது. அதாவது அர்ச்சனாவும் நிஷாவும் கார்டன் ஏரியாவில் நடந்தப்படியே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இந்த கால் டாஸ்க் முடிந்த பிறகுதான் சனம் ஷெட்டியிடம் நான் பேசப் போகிறேன் என்றார்.

கெட்ட வார்த்தையால் திட்டி..

கெட்ட வார்த்தையால் திட்டி..

நிஷா எதைப்பற்றி என்று கேட்க, நாமினேஷன் டாப்புள் கார்டு டாஸ்க்கின் போது நான் டைட்டில் வேண்டாம் என்று சொன்னதாக சனம் கூறினார். நான் எப்போது அப்படி சொன்னேன் என்று கேட்க வேண்டும் என கெட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தினார். ஆனால் அதனை நிகழ்ச்சிக் குழு மியூட் செய்துவிட்டது.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil
ராஸ்கல்..

ராஸ்கல்..

தொடர்ந்து பேசிய அர்ச்சனா, எப்போ பாரு குறும்படம் குருமா படம்ன்னு நான் காட்றேன் குறும்படம்.. ராஸ்கல்.. என சனம் ஷெட்டியை திட்டினார். அப்போது வீட்டுக்குள் ஷிவானியும் பாலாஜியும் இடுப்பில் கைப்போட்டப்படி இடித்து இடித்து விளையாடியதை பார்த்து அவர்களை போன்றே அர்ச்சனாவும் நிஷாவும் கிண்டல் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X