Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதலில் விழுந்த சாக்லேட் பாய் சித்தார்த்.. அதிதி ராவுடன் டேட்டிங்?
சென்னை : நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்து வருவதாகவும், பல இடங்களில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் சித்தார். படங்களை தவிர்த்து சமுக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கிக் கொள்வார்.
180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் நடிகர் சித்தார்த்.
வாரிசு
விஜய்
பற்றி
வந்த
ஹாட்
தகவல்...ஒன்னு
இல்ல
ரெண்டு...அப்போ
மாஸா
இருக்குமே

மகா சமுத்திரம்
அஜய் பூபதி இயக்கத்தில் சைதன் பரத்வாஜ் இசையில் தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவானத் திரைப்படம் மகா சமுத்திரம். இப்படத்தில் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்து நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் தங்கள் உறவைப் பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஒரே காரில்
ஆனால், சமீபத்தில் நடந்த ஏஆர் ரஹ்மான் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மும்பையில் ஒரு சலூனில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியே வந்துள்ளனர். அப்போது அதிதி ராவ் ஊடகங்களுக்கு சிரித்தபடி போஸ்கொடுத்துள்ளார். ஆனால், அதே சலூனிலிருந்து வெளியேறிய வந்த சித்தார், விலகி சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம் என்ற பட கையை அசைத்துள்ளார். அவர்கள் இருவரும் சலூனிலிருந்து தனித்தனியாக வெளியே வந்தாலும், ஒரே காரில் ஒன்றாகச் சென்றனர்.

காதலில் விழுந்த சித்தார்த்
அதிதியும் சித்தார்த்தும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி பார்ட்டி மற்றும் விழா நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், சொல்லப்போனால் மகா சமுத்திரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளின் போது இருவரும் வெளியூர்களுக்கு ஒரே காரில் தான் ஒன்றாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

நீ நீயாகவே இரு
சித்தார்த்தின் 43 வது பிறந்தநாளில், அதிதி ராவ் ஹைதாரி இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் பிக்சி பாய்... எப்போதும் மந்திர சிரிப்புடனே இருங்கள்...எப்போதும் நீ நீயாகவே இரு... முடிவில்லாத சிரிப்பு மற்றும் சாகசங்களுக்கு நன்றி. நீங்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார். இவை எல்லாத்தையும் வைத்து இணையவாசிகள் அவர்கள் காதலிப்பதாக செய்திவெளியிட்டு வருகிறார்கள்.