இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருதா?...தனுஷ், செல்வராகவனின் செம மாஸ்டர் பிளான்

சென்னை : கோலிவுட்டில் பிரபலமான வெற்றி கூட்டணியான செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி உள்ளன.

Recommended Video

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் ரிலீசாகும் அதே செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 தனுஷ் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தனுஷ் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் செம ஹிட்டாகி வசூலை குவித்து வருகிறது. இதனால் அவரின் அடுத்த படமான நானே வருவேன் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. தனுஷிற்காகவே செல்வராகவன் உருவாக்கிய கதை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் என்பதாலும் நானே வருவேனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

 தனுஷ்-செல்வராகவன் இணைந்து நடிப்பு

தனுஷ்-செல்வராகவன் இணைந்து நடிப்பு

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் Elli AvrRam மற்றும் இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள். பீஸ்ட், சாணி காயிதம் படங்களைத் தொடர்ந்து நானே வருவேன் படத்திலும் மிக முக்கியமான ரோலில் செல்வராகவன் நடித்துள்ளார். இதனால் தனுஷ்- செல்வராகவன் இணைந்து திரையில் தோன்றும் சீன்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த இரண்டாம் பாகமும் வருதா?

அடுத்த இரண்டாம் பாகமும் வருதா?

செல்வராகவன் ஏற்கனவே, தனுஷை வைத்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து நானே வருவேன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க செல்வராகவன் - தனுஷ் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் அறிவிப்பு வருமா?

விரைவில் அறிவிப்பு வருமா?

இதனால் நானே வருவேன் படத்தின் ரிலீசிற்கு பிறகு இது பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே வாத்தி/ சார், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனால் இந்த படங்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X