»   »  என்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது!

என்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன?- வீடியோ

சென்னை: "தமிழ் நாட்டு அரசியல் சிஸ்டம் சரியில்லை. அதை மொத்தமா மாத்தணும்... தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பெருமையோடு பார்க்கிற வகையில் மாத்தணும்," - அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் - தொண்டர்களிடம் சமீப காலமாகச் சொல்லி வரும் தாரக மந்திரம் இது.

ஆனால் இதையெல்லாம் அவர்கள் காதில் வாங்கிக் கொள்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் செய்கிறார்களா அல்லது கறுப்பு ஆடுகள் புகுந்து ஆட்டையைக் கலைக்கின்றனவா என்றே தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சில வேலைகள் நடந்தேறி வருகின்றன.

Are Soundarya and Dhanush heirs of Rajini politics?

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே சொன்னது... 'பணம் சம்பாதிக்கணும் என்ற நோக்கத்தோடு யாரும் என் பக்கத்தில் கூட வந்துடாதீங்க... அரசியலில் நான் நுழைவதே என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நல்லா வாழ வைத்துப் பார்க்கணும் என்பதற்காகத்தான்... இதில் தனிப்பட்ட நலன்கள் கிடையாது... குடும்பத்தினர் தலையீடு இருக்கக் கூடாது..' என்றெல்லாம் சொல்லித்தான்.

ரஜினி அரசியல் பிரவேசம் ஆரம்பித்ததும், அவரது குடும்பத்தினர் தலையீடு என்பது சுத்தமாக இல்லாமல்தான் இருந்தது. இப்போதும்கூட அப்படித்தான் என்று நம்புகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அசைக்கும் விதமாக நேற்று சில போஸ்டர்கள், ட்வீட்டுகள், பேஸ்புக் பதிவுகள் வந்துள்ளன. இது ரஜினியை அவரது நேர்மைக்காக மட்டுமே நேசிக்கும் பலரையும் சங்கடப்படுத்தியுள்ளது.

விரைவில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அரசியலில் குதிக்கிறார்.... தன் அப்பாவுக்கு துணையாக அவர் களமிறங்குகிறார் என்பது ஒரு செய்தி. இந்த செய்தியை ரஜினி தரப்பே உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் ரீட்வீட் எல்லாம் செய்துள்ளது.

அடுத்ததுதான் பெரிய ஷாக்... இன்னும் கட்சியே தொடங்காத ரஜினியின் அரசியல் வாரிசு என தனுஷை அறிவித்துள்ளனர் அவரது ரசிகர்கள் சிலர். மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷே வருக என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆர்வக்கோளாறு தனுஷ் ரசிகர்கள் பலர் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Are Soundarya and Dhanush heirs of Rajini politics?

ரஜினி தும்மினாலே அதற்கு பலவித அர்த்தங்கள் மீம்களாக உலா வரும் நேரம் இது. இந்த நேரத்தில் சௌந்தர்யாவின் அரசியல் பிரவேச அறிவிப்பு, தனுஷின் வாரிசு அறிவிப்பெல்லாம்... தெரிஞ்சுதான் செய்றாங்களா...? இதுக்கெல்லாம் குறைஞ்சபட்சம் மறுப்பாவது ரஜினி தரப்பில் இல்லாவிட்டாலும், சௌந்தர்யா, தனுஷ் தரப்பிலாவது வரவேண்டாமா? என அங்கலாய்க்கிறார்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற உண்மையான ரசிகர்கள்.

-நமது சிறப்பு நிருபர்

English summary
Some of the fans have announced that Soundarya and Dhanush would be entered politics as Rajinikanth's heirs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X