»   »  நடிப்பை விட வேறு விஷயத்தில் குறி: தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்

நடிப்பை விட வேறு விஷயத்தில் குறி: தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தான் நடித்து வரும் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் தன் நடிப்பை விட வேறு விஷயத்தில் விருப்பமாக இருப்பதாக நடிகை அவந்திகா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த அவந்திகா ஷெட்டி கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ராஜு கன்னடா மீடியம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பற்றி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பெண்கள்

பெண்கள்

சினிமா துறையில் பெண்கள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளார்களா? இந்த துறையில் உள்ள சில ஆண்களின் செயலால் பாதிக்கப்பட்டவள் என்கிற முறையில் இதை எழுதுகிறேன்.

 கேளுங்கள்

கேளுங்கள்

நான் நடித்த ரங்கிதரங்கா, ராஜரதா, கல்பனா 2 ஆகிய எந்த படக்குழுவை கேட்டாலும் நான் எப்படி என்று கூறுவார்கள். இந்நிலையில் பிரபல கன்னட தயாரிப்பாளர் கே. சுரேஷின் ராஜு கன்னடா மீடியம் படத்தில் ஒப்பந்தமான அனுபவத்தை மறக்க நினைக்கிறேன்.

பொய்

பொய்

சுரேஷ் கூறிய பொய்யான தகவலை வைத்து வெளியான செய்தியை படித்தேன். நான் தவறானவள் என்பது போன்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை என் பெயரை கெடுக்கும் முயற்சி.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

படத்தின் முதல் ஷெட்யூலின்போதே இயக்குனரும், தயாரிப்பாளரும் என் நடிப்பை விட வேறு விஷயத்தில் விருப்பமாக இருப்பது தெரிய வந்தது. அது தெரிந்தும் தெரியாதது போன்றே நடித்தேன்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

பாங்காக்கில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் என் நடிப்பு சரியில்லை என்று கூறி மும்பைக்கு கிளம்பச் சொன்னார்கள். அவர்கள் கொடுத்த செக் பவுன்ஸானதை கேட்ட பிறகே என்னை கிளம்பச் சொன்னார்கள்.

சம்பளம்

சம்பளம்

என் சம்பளம் முழுமையாக அளிக்கப்பட்டவில்லை. செக் வேறு பவுன்ஸ் ஆகியுள்ளது. வேறு யாரையாவது வைத்து டப்பிங் பேசி படத்தை வெளியிடுவார்கள் என தெரியும். இது குறித்து நான் கர்நாடக நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். நீதி கிடைக்கும் என நம்புகிறேன். கர்நாடாக பிலிம் சேம்பரோ நான் கடிதம் எழுதியும் கண்டுகொள்ளவில்லை.

சுரேஷ்

சுரேஷ்

தயாரிப்பாளரின் பெயரை கெடுக்கக் கூடாது என்று தான் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னை பற்றி வெளியான சீப் செய்தியை படித்த பிறகு சும்மா இருக்க முடியவில்லை. என் போன்று வேறு எந்த பெண்ணும் இப்படி பாதிக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார் அவந்திகா.

Read more about: suresh, sandalwood, சுரேஷ்
English summary
Kannada actress Avantika Shetty has accused the producer of the movie Raju Kannada medium of sexual harassment. She has explicitly stated on her Facebook and Twitter handles that she is being troubled by the producer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil