»   »  ‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...’ தமிழிலும் ‘புகழ்’ அடைவாரா அரிஜித் சிங்

‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...’ தமிழிலும் ‘புகழ்’ அடைவாரா அரிஜித் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘அஷிக்லி' என்ற இந்தி படத்தில் இடம்பெற்று நாடெங்கும் புகழ் பெற்ற "தும் ஹி ஹோ" என்ற பாடலைப் பாடிய அரிஜித் சிங், ஜெய் நடித்து வரும் புகழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அரிஜித் சிங் இப்படத்தில், ‘நீயே வாழ்க்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...' என்ற மெலடிப் பாடலைப் பாடியுள்ளார்.

‘உதயம் என்.ஹெச்.4 ‘பொறியாளன்' ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்து வரும் படம் புகழ். இவன் வேறமாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்த சுரபி இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரேடியன்ஸ் மீடியா மற்றும் பிலிம் டிபார்ட்மெண்ட் தயாரிக்கும் புகழ் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 'வடகறி' படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான, விவேக் சிவா-மெர்வின் ஆகிய இரட்டையர்கள் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

புகழ்...

புகழ்...

இந்த படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘புகழ்'. இது ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்பதால், தனது முந்தைய சராசரி இளைஞர் பிம்பத்தை ஜெய் உடைப்பார் என்கிறது படக்குழு.

அனிருத்...

அனிருத்...

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான "நாங்க தான்டா பொடியன் தாண்டா ஆட்டம் தாண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா" என்ற பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

அரிஜித் ஜிங்...

அரிஜித் ஜிங்...

அதேபோல, ‘அஷிக்லி' என்ற இந்தி படத்தில் இடம்பெற்று நாடெங்கும் புகழ் பெற்ற "தும் ஹி ஹோ" என்ற பாடலைப் பாடிய அரிஜித் சிங், என்பவர் இப்படத்தின் மூலம் தமிழிலும் பாடகராக அறிமுகம் ஆகிறார்.

மெலோடி பாடல்...

மெலோடி பாடல்...

இவர் மெலொடி பாடலான, "நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்" என்ற பாடலை பாடியுள்ளார்.

English summary
Singer Arijit Singh, who shot to fame for his soulful rendition of the Bollywood number Tum Hi Ho from Aashiqui 2, will now sing his first song in Tamil for the Jai and Surabhi-starrer Pugazh. Apart from Arijit, composer Anirudh will also be lending his voice to a song in the film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil