»   »  ஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன்

ஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்!- வீடியோ

மும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை பற்றி தவறாக எழுதிய செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் நடிகர் அர்ஜுன் கபூர்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் நடிகர் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருந்த வரை அவருடனும் சரி, போனியுடனும் சரி அர்ஜுன் பேசியது இல்லை.

ஸ்ரீதேவி இறந்த பிறகு போனி மற்றும் அவரின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருக்கு ஆதரவாக உள்ளார் அர்ஜுன்.

அன்ஷுலா

அன்ஷுலா

அர்ஜுன் மட்டும் அல்ல அவரின் தங்கை அன்ஷுலாவும் ஜான்வி, குஷியை தங்களின் சொந்த தங்கையாகவே பார்க்கிறார்கள். அவ்வப்போது அவர்களை சந்தித்து பேசுகிறார்கள்.

குஷி

குஷி

ஜான்வியும், குஷியும் தங்களின் தந்தையுடன் அர்ஜுன் கபூரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஜான்வி அங்கம் எல்லாம் தெரியும்படி அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக ஒரு செய்தி இணையதளம் தெரிவித்திருந்தது.

திட்டு

தங்கை ஜான்வியை பற்றி தவறாக எழுதிய செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டுள்ளார் அர்ஜுன் கபூர்.

ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

ஜான்வி, குஷி, போனியுடன் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ திட்டமிட்டுள்ளாராம் அர்ஜுன். தாயை இழந்து கஷ்டப்பட்ட அர்ஜுன், அன்ஷுலாவுக்கு ஜான்வி, குஷியும் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

English summary
Bollywood actor Arjun Kapoor has blasted a website that published a news saying that Janhvi Kapoor wore skimpy clothes while visiting brother's house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X