»   »  ஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்

ஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குடும்பத்தை கெடுத்த ஸ்ரீதேவி மரணத்தால் இணைந்த குடும்பம்- வீடியோ

மும்பை: நடிகர் அர்ஜுன் கபூர் செய்த காரியம் பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர். நடிகை ஸ்ரீதேவி தங்கள் தந்தையை பிரித்து அழைத்துச் சென்றதால் அர்ஜுன் அவருடன் பேசியதே இல்லை.

மேலும் தந்தையிடமும் அர்ஜுன் பேசாமல் இருந்தார். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தந்தையுடன் பேசத் துவங்கியதுடன் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி கபூர் மீதும் பாசமாக உள்ளார்.

Arjun Kapoor is a supportive son, brother

நமஸ்தே இங்கிலாந்து படப்பிடிப்புக்காக பஞ்சாப் சென்றிருந்த அர்ஜுன் மும்பை திரும்பினார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் போனி கபூர், குஷி, ஜான்வி ஆகியோருக்கு விருந்து கொடுத்தார்.

அந்த விருந்து நிகழ்ச்சியில் அண்மையில் துபாயில் திருமணம் செய்து கொண்ட நடிகர் மோஹித் மர்வா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அர்ஜுன் தனது தந்தை, ஜான்வி, குஷிக்கு ஆறுதலாக இருப்பதை பார்த்து பாலிவுட்காரர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

English summary
Actor Arjun Kapoor has arranged for a get-together for dad Boney Kapoor and half-sisters Jhanvi and Khushi at his residence in Mumbai on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X