»   »  நள்ளிரவு பார்ட்டியில் வாலிபரை காயப்படுத்திய பிரபல நடிகர் மீது புகார்

நள்ளிரவு பார்ட்டியில் வாலிபரை காயப்படுத்திய பிரபல நடிகர் மீது புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கேமராவை வீசியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள இரவு நேர கிளப்பில் நேற்று இரவு டிஜேவாக செயல்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் அர்ஜுனை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை பார்த்த அர்ஜுன் கோபம் அடைந்துள்ளார்.

கேமரா

கேமரா

அந்த புகைப்படக் கலைஞர் வைத்திருந்த கேமராவை பறித்து கூட்டத்தை நோக்கி வீசியுள்ளார் அர்ஜுன். இதில் கூட்டத்தில் இருந்த ஷோபித் என்பவரின் தலையில் கேமரா பட்டு அவர் காயம் அடைந்தார்.

அர்ஜுன்

நான் சனிக்கிழமை இரவு பார்ட்டிக்காக ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் அர்ஜுன் ராம்பல் டிஜேவாக இருந்தார். அவர் கூட்டத்தை நோக்கி கேமராவை வீசியதில் எனக்கு காயம் ஏற்பட்டது என்றார் ஷோபித்.

பவுன்சர்கள்

பவுன்சர்கள்

இந்த சம்பவம் இரவு 3.30 மணிக்கு நடந்தது. இது பற்றி அவரிடம் கேட்க சென்றால் அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தூக்கி வெளியே வீசிவிட்டார்கள் என ஷோபித் தெரிவித்தார்.

புகார்

புகார்

போலீசில் அர்ஜுன் ராம்பல் மீது புகார் அளித்துள்ளேன். ஆனால் போலீசார் என் புகாரை கண்டுகொள்ளவில்லை, ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று ஷோபித் கூறினார்.

English summary
A man named Shobit has given complaint against Bollywood actor Arjun Rampal for throwing camera at him at a night club in Delhi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos