»   »  அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே இதிலும் கில்லியா... நாளை வெளியாகிறது பாடல்!

அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே இதிலும் கில்லியா... நாளை வெளியாகிறது பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜீவியின் 100 % காதலி- வீடியோ

சென்னை : தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்', ஜீவா ஜோடியாக 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

இந்நிலையில், 'நா பிரணமை' என்கிற தெலுங்குப் படத்திற்காக ஒரு முழுப்பாடலைப் பாடியிருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி படக்குழுவையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார். முதல் படமான 'அர்ஜுன் ரெட்டி'-யில் பல முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

தமிழில் ஷாலினி பாண்டே

தமிழில் ஷாலினி பாண்டே

'அர்ஜுன் ரெட்டி' வெற்றிபெற்றதையடுத்து தமிழில் சந்திரமௌலி இயக்கும் '1௦௦% காதல்' என்கிற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

மகாநதி

மகாநதி

துல்கர் சல்மான் நடிக்கும் சாவித்ரி வாழ்க்கையைப் பற்றிய படமான 'மகாநதி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. ஜீவா ஹீரோவாக நடிக்கும் 'கொரில்லா' படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.

தமிழ் கற்கும் ஷாலினி

தமிழ் கற்கும் ஷாலினி

தெலுங்கை கற்றுக்கொண்டு தெலுங்கில் டப்பிங் பேசியது போல, தமிழையும் கற்றுக்கொண்டு நானேதான் தமிழில் டப்பிங் பேசுவேன் எனக் கூறி மிரள வைத்துள்ளார் ஷாலினி பாண்டே. ஷாலினி பாண்டே தமிழ் கற்றுக்கொள்வதற்காக தற்போது அவருக்கு தமிழ் டியூஷன் வகுப்பு எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடகி அவதாரமும்

பாடகி அவதாரமும்

சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலினி பாண்டே நல்ல பாடும் திறன் கொண்டவர். ஏற்கெனவே சில ஆல்பங்களில் அவர் பாடியிருக்கிறாராம். இந்த நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகி வரும் 'நா பிரணமை' என்ற படத்திற்காக ஒரு முழுப்பாடல் பாடயிருக்கிறார் ஷாலினி பாண்டே.

பிப்ரவரி 14 ரிலீஸ்

பிப்ரவரி 14 ரிலீஸ்

இந்த பாடல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளதாம். தான் சினிமாவுக்காக பாடிய முதல் பாடல் காதலர் தினத்தில் வெளியாகயிருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார் ஷாலினி பாண்டே. தமிழிலும் கூட வாய்ப்பு தரப்படலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

English summary
Shalini Pandey, who is the heroine of 'Arjun Reddy', is currently acting in some tamil films like '100% Kaadhal' and 'Gorilla'. Shalini Pandey is a good singing talented person and she has already sung in some albums. At this stage, Shalini Pandey is sung for 'Naa Pranamai' Telugu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil