Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து 'தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரில் ட்விஸ்ட் வைத்துள்ளது படக்குழு.
ஆசையை
நேரடியாக
சொன்ன
விஜய்
தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா
லோகேஷ்
கனகராஜ்
!

அறுபதை தொட்ட ஆக்சன் கிங்
தமிழ் சினிமாவில் அதிகமான போலீஸ் திரைப்படங்களில் நடித்த ஹீரோக்களில் அர்ஜுனும் மிக முக்கியமானவர். 'ஜெய்ஹிந்த்', 'கர்ணா', 'ஜென்டில்மேன்', 'முதல்வன்' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அர்ஜுன், தற்போது இளம் நாயகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இன்று அவர் சுதந்திர தினத்துடன், தனது 60வது பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்.

.இரண்டாவது ரவுண்டில் பிஸி
ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள அர்ஜுன், 'மங்காத்தா' படத்தில் அஜித்துடன் ஒரு சூப்பர் கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் இளம் ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய் ஆண்டனியுடன் 'கொலைகாரன்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ' ஆகிய படங்களில், முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.

தீயவர் குலைகள் நடுங்க
இந்நிலையில், 'தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்து வருகிறார் அர்ஜுன். இப்படத்தை தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்குகிறார். இதுவே இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் க்ரைம் திரில்லர் ஜானரில், பரபரக்கும் ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

செகண்ட் லுக் போஸ்டர்
'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் மிரட்டலான லுக்கில் இருந்தனர். இந்நிலையில், அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கழுகுப் பார்வையில் அர்ஜுன் யாரையோ தேடுவதைப் போல உருவாகியுள்ள இந்த போஸ்டரை, நடிகர் விஷாலும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவர்களது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.