»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை :

நியூ படத்தைத் தடை செய்ய கோரிய வழக்கில் அந்தப் படத்தை பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இப்போது அரசாட்சி படத்தையும்பார்க்கவுள்ளனர்.

நியூ படத்தில் ஆபாச காட்சிகள், பாடல்கள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக, நியூ படத்தை நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார்ஆகியோர் பார்த்தனர்.

தற்போது அரசாட்சி படத்தைத் தடை செய்யக் கோரியும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று விசாரணைநடந்தபோது, நீதி தோற்றது என்று படத்தில் வசனம் வருகிறது. அத்தோடு, குற்றவாளி ஒருவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களைகதாநாயகன் கொலை செய்வதாக காட்சிகள் வருகின்றன.

இத்தகைய காட்சிகள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில் உள்ளன. எனவே இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று மனுதாரர் காளிதாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக் குமார் ஆகியோர், அரசாட்சி படத்தைப் பார்க்க முடிவு செய்தனர்.இதையடுத்து வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு குட்லக் பிரி வியூ தியேட்டரில் நீதிபதிகள் அரசாட்சி படத்தைப் பார்க்கவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil