»   »  பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தால் காப்பாற்றப்பட்டேனா?: ஸ்டண்ட் சில்வா

பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தால் காப்பாற்றப்பட்டேனா?: ஸ்டண்ட் சில்வா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தின் உதவியால் நாடு திரும்பவில்லை என ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கி வரும் தல 57 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. தல 57 படக்குழு தற்போது பல்கேரியாவில் உள்ளது. இந்நிலையில் சில்வா மட்டும் நாடு திரும்பியுள்ளார்.

அவர் ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்ய நாடு திரும்பியுள்ளார்.

கைது

கைது

பல்கேரியாவில் சில்வா அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும், அஜீத் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அவரை வெளியே கொண்டு வந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சில்வா

சில்வா

பல்கேரியாவில் கைது செய்யப்பட்டீர்களா என்று சில்வாவிடம் கேட்டால் சிரிப்பாய் சிரிக்கிறார். என்னை யாரும் கைது செய்யவில்லை, 2.0 பட வேலைக்காக நாடு திரும்பினேன் என்கிறார் சில்வா.

அஜீத்

அஜீத்

ரஜினி சார் பட வேலை இருக்கிறது அதனால் ஊருக்கு போகிறேன் என அஜீத் சாரிடம் தெரிவித்துவிட்டு தான் வந்தேன். நான் கைது செய்யபட்டேன் என யார் வதந்தியை கிளப்பிவிட்டது என தெரியவில்லை. இதை கேட்டால் அஜீத்தே சிரிப்பார் என சில்வா தெரிவித்தார்.

வதந்தி

வதந்தி

நான் ரஜினி சாருக்காக ஊருக்கு வந்தால் இங்கு என்னைப் பற்றி என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி வதந்தியை பரப்புகிறார்களோ என்று சில்வா கூறுகிறார்.

English summary
Stunt master Silva said that there is no truth in the news of him getting arrested in Bulgaria and saved by Ajith.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil