அம்பு ஜனனியின் தப்பாட்டம்..விக்ரமனுக்கு எதிராக மொழி பிரச்சனையை தூண்டி அசிங்கப்பட்ட அசீம், அமுதவாணன்
கைக்கு கை மாறும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் ஜனனி விக்ரமனுக்கு எதிராக எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பிக்பாஸ் வீட்டில் விக்ரமனின் வளர்ச்சியால் வெறுப்பில் இருக்கும் ஜனனி, அமுது, அசீம் கூட்டணி இன்று எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
விக்கிரமனை மீது மொழி பிரச்சனையை தூண்டி தவறாக சித்தரிக்க முயன்ற மூவரின் கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது.

சூழ்ச்சிகள் நிறைந்த பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு பல சூழ்ச்சிகளின் சங்கமம் என்று சொல்லலாம். இது ஒரு உளவியல் சார்ந்த வீடு. இங்கு கோபம், சந்தோசம், துரோகம், சூழ்ச்சி, நட்பு என பலவிதமான உணர்ச்சிகளுடன் பலரும் விளையாடுவதை பார்க்கலாம். இதில் கேமராக்காகவும், போலித்தனமாகவும் நடப்பவர்கள் பின்னர் அம்பலப்பட்டு போய் வெளியேற்றப்பட்டதை பார்க்க முடிந்தது. இதில் யதார்த்தமாக விளையாடும் நபர்கள், மக்களாலும் ஆதரவு அளிக்கப்பட்டு, ஹோம்மேட்ஸ்களால் வெறுக்கப்பட்டாலும் வெற்றியடைந்ததை பல சீசனங்களில் பார்த்திருக்கிறோம்.

ஆரி போல் தனியாக விளையாடும் விக்ரமன்
ஆரி அர்ஜுன் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவரை பிக்பாஸின் போட்டியாளர்கள் அனைவரும் ஒதுக்கி அவமானப்படுத்தினர் ஒரு கட்டத்தில் அவர் தனியாக புறம்பும் நிலைக்கெல்லாம் தள்ளப்பட்டார். ஆனால் டைட்டில் வின்னர் அவர்தான். அதைப்போல் விக்ரமன் இந்த சீசன் 6-ல் விளையாடி வருகிறார். எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கு நியாயத்தை சரியாக பேசுகிறார். வார்த்தைகளில் கவனமாக பேசுகிறார். யாரையும் அவமதிக்காமல், மனிதநேயம், மனிதனை மதிப்பது என்பதை வலியுறுத்தி விளையாடி வருகிறார். இதனால் விக்ரமனுக்கு மரியாதை கூடி வருகிறது.

அமுதவாணன் ஜனனியின் தப்பான ஆலோசனையால் அழிகிறார்
அதேநேரம் எல்லா சீசன்களிலும் இருக்கும் வில்லன் கும்பல் போல் இந்த சீசனிலும் விக்கிரமனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்த்து நின்று மதிப்பை இழந்த அமுதவாணன், ஜனனியின் ஆலோசனையால் மேலும் மேலும் தப்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். கமல் ஒரு தடவை லேசாக இதை சுட்டிக்காட்டியும் அமுதவாணன் திருந்தியதாக இல்லை. அசீமும் விக்ரமன் தனக்கு மிகப்பெரிய போட்டியாளர், அதனால் விக்கிரமனை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருக்கிறார். இந்த நிலையில் நீதிமன்ற டாஸ்கை பயன்படுத்தி, விக்ரமனை கேவலப்படுத்திவிடலாம் என்று அசீம் முடிவு எடுத்து ஜனனியிடம் அவரே போய் இந்த மாதிரி உங்கள் தமிழைப் பற்றி பேசியதை வழக்காக தொடுங்கள் நான் வழக்கறிஞராக இருக்கிறேன் என்று பேசி சம்மதம் வாங்கினார்.

எடுப்பார் கைப்பிள்ளை ஜனனியின் வழக்கு
அசீமின் யோசனைப்படி ஜனனி பிக்பாஸிடம் விக்கிரமன் தன்னுடைய இலங்கைத் தமிழ் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்று வழக்கு கொடுத்தார். அதற்குப் பிறகு விக்கிரமன், ஜனனி, அமுதவாணன் உட்கார்ந்து விக்ரமனை எப்படி இந்த வழக்கில் தோற்கடிக்கலாம் என்று திட்டம் போட்டு பாய்ண்ட்களை எழுதினர். மறுபுறம் இந்த விவகாரத்தில் விக்ரமன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை ஹவுஸ்மேட்ஸ் பலரும் பேசியதை கண்டோம். இந்த வழக்கில் நீதிபதியாக மணிகண்டனும் விக்கிரமன் தரப்பு வழக்கறிஞராக குஇன்சியும், ஜனனி தரப்பு வழக்கறிஞராக அசீமும் செயல்பட்டனர்.

விக்ரமனை சிக்க வைக்க அசீம் & கோ செய்த தகிடு தத்தம்
ஆரம்பத்திலிருந்து அசீம் தனது வாதத்தில் விக்ரமன் ஜனனியை அவரது இலங்கை தமிழை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியதாக பதிவு செய்ய முயற்சித்தார். ஆனால் குயின்சி தனது வாத திறமையால் அதை முறியடித்தார். சாட்சியாக வந்த ஜனனி தனது தமிழை விக்ரமன் கேவலமாக பேசியதாக பதிவு செய்தார். அமுதவாணனும் சாட்சி கூண்டில் ஏறி விக்கிரமன் அப்படித்தான் பேசினார் என்று பதிவு செய்தார். ஆனால் விக்ரமன் தரப்பில் சாட்சி சொன்ன ரச்சிதா, விக்கிரமன் அவ்வாறு பேசக்கூடியவர் அல்ல. அவர் பேசவும் இல்லை. அவர் சொன்னது ராஜா ராணி டாஸ்கில் பேசப்படும் செந்தமிழை பேசுவதில் சிரமம் இருக்கிறதா? அதனால் உங்களுடைய பங்களிப்பு குறைந்ததா? என்று தான் கேட்டார் என்று தெளிவுபடுத்தினார்.

இலங்கைத் தமிழை கொச்சைப்படுத்தும் நோக்கமில்லை-விக்ரமன்
இதே கருத்தை விக்கிரமனும் தெரிவித்தார். ஜனனி பேசும் இலங்கை தமிழ் எனக்கு மிக மிகப் பிடிக்கும், அதை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கூட சொல்லியிருந்தேன். ஆனால் ராஜா-ராணி டாஸ்க்கில் அவருடைய பங்களிப்பு குறைவாக இருந்தது. இதை நான் சுட்டிக்காட்டி உங்களுக்கு இந்த ராஜா ராணி டாஸ்க் செந்தமிழ் பேசுவதில் பிரச்சனை இருக்கிறதா அதனால் தான் பங்களிப்பு குறைவா என்று கேட்டேன். என்று விக்கிரமன் விளக்கினார். இதை அடுத்து தீர்ப்பளித்த நீதிபதி மணிகண்டன் விக்ரமன் ஜனனியின் தமிழை நன்றாக இருக்கிறது என்று இதற்கு முன்னர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சுட்டிக் காட்டும் பொழுது அனைவரும் புரிந்து கொள்ளும் விஷயம் ராஜா-ராணி டாஸ்க்கில் பேசப்படும் அந்த தமிழ் உங்களுக்கு சிரமமாக இருந்ததால் உங்கள் பங்களிப்பு குறைவாக இருந்ததா என்று விக்ரமம் கேட்டதாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஆகவே விக்கிரமன் தரப்பே இதில் வெற்றி பெற்றது என்று மணிகண்டன் கூறினார்.

மூக்குடைப்பட்ட அசீம், அமுது, ஜனனி டீம்
இதனால் மூக்குடைப்பட்ட அசிம், ஜனனி, அமுதவாணன் தலை குனிந்து வெளியேறினர். பின்னர் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் இந்த தீர்ப்பு சரியில்லை, அது என்ன ஃபேவரிசம் என்றெல்லாம் தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. தவறான ஒரு விஷயத்தை எடுத்து ஒருவரை அவதூறு செய்யலாம் என்று முயற்சிப்பவர்கள் எப்பொழுதும் தோல்வியை அடைவார்கள் என்பது இந்த டாஸ்க் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரம் அமுதவாணன் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் நிலைத்திருப்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications











