'அஜித்தை குடும்பம் குடும்பமாக ரசிப்பார்கள்'... விஸ்வாசம் சீக்ரெட் சொல்லும் கலை இயக்குனர் மிலன்!
விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துடன் பணியாற்றியது பற்றி கலை இயக்குனர் மிலன் பகிர்ந்துள்ளார்.
சென்னை : விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசிப்பார்கள் என்று கலை இயக்குனர் மிலன் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10ம் தேதியன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள். யூடியூபில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது விஸ்வாசம் டிரெய்லர்.

இந்நிலையில் இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் கூறியாதாவது, "விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்புகொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை.
அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்களை டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாக அவரை ரசிப்பார்கள் " என்றார்.


Click it and Unblock the Notifications











