»   »  கலை, கடமை ரெண்டுமே முக்கியம் பாஸ் - சேது

கலை, கடமை ரெண்டுமே முக்கியம் பாஸ் - சேது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பு மற்றும் கடமை இரண்டுமே எனது 2 கண்கள் போன்றவை என்று வாலிபராஜா படத்தின் நாயகன் சேது தெரிவித்திருக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சேது.தற்போது அடுத்ததாக கண்ணா லட்டு தின்ன ஆசையா படக்குழுவினருடன் மீண்டும் கூட்டணி அமைத்து வாலிபராஜா படத்தில் நடித்திருக்கிறார்.


Art and Duty both of My Eyes - Says Sethu

சேது அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை, ஆமாம் மருத்துவத் துறையில் 'எம்.பி.பி.எஸ் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.


அதோடு கூடுதலாக தோல் மற்றும் அழகை மேம்படுத்தும் டெர்மடாலஜி படிப்பையும் தற்போது வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சேது. ஒரு மருத்துவராக இருந்து கொண்டு உங்களால் எப்படி நடிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டால் ''கலையும், கடமையும் எனக்கு இரண்டு கண்கள்'' என்கிறார்.


சந்தானம், சேது,விசாகா சிங் , வி.டி.வி.கணேஷ் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் வாலிப ராஜா படத்தை காமெடியை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் சாய் கோகுல் ராம்நாத்.


வாலிபராஜா படத்தின் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் பவர்ஸ்டார் சீனிவாசன்.

English summary
Kanna Laddu Thinna Aasaiya Fame Hero Sethu Says "Art and Duty both of My Eyes". Sethu's Upcoming Film Vaaliba Raja Released on October 21.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil