»   »  சோஷியல் மீடியா பக்கம் கொஞ்ச நாளு தல வெச்சுப் படுக்காத: ஆர்த்திக்கு எச்சரிக்கை

சோஷியல் மீடியா பக்கம் கொஞ்ச நாளு தல வெச்சுப் படுக்காத: ஆர்த்திக்கு எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ஆர்த்தி ட்வீட் செய்து பல்பு வாங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆர்த்தி என்றால் அவரது காமெடிகள் நினைவுக்கு வரும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை நினைத்தாலே பலருக்கு எரிச்சல் தான் வருகிறது.

அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் ரவுசு செய்துள்ளார். அவர் என்னப்பா செய்வார், கொடுத்த காசுக்கு வேலை செய்துள்ளார்.

ட்வீட்

என்னை கலாய்த்து அனைவரும் டயர்டாகியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..அருமையான மீம்ஸ்கள்...உங்களின் ஆதரவுக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி. அந்த ட்வீட்டை பார்த்த பலரும் கமெண்ட் போட்டுள்ளனர்.

கலாய்

உன்ன இனிமேல் எப்போ பார்த்தாலும் கடுப்பாத் தான் இருக்கும்...

நாங்க இன்னும் உன்ன கலாய்ச்சு டயர்டு ஆகல

ஓவியா

ஒரே கேள்விக்கு மட்டும் விடை சொல்லுங்க ஆர்த்தி, இத்தனை பேருக்கு பிடிச்ச ஓவியாவ உங்களுக்கு ஏன் பிடிக்கல.. டாட்😌 என்று ஒருவர் கேட்டதற்கு ஓவியாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை இந்த வார கேப்டன் பதவிக்கு நாமினேட் செய்தேன். நான் அவருக்கு எதிரானவள் அல்ல என்று பதில் அளித்துள்ளார் ஆர்த்தி.

வந்துட்டியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள ஆர்த்திக்காக இப்படி ஒரு ட்வீட்

ஓவர்

எல்லாம் ஓகே தான் காயத்ரி கூட சேர்ந்து ஓவரா பேசிட்டீங்க மத்தபடி கடைசி ஒரு வாரம் மாதிரி ஆரம்பத்துல இருந்தே இருந்திருந்தா நீங்க இப்ப அந்த வீட்ல

போலி

வாம்மா போலி, போலியா நடிச்சாதான் மக்கள் ஒட்டு போடுவாங்கன்னா நானும் போலியா நடிக்கிறேன்னு விட்டையே ரீலு, மக்கள் உனக்கு முட்டாள்ன்னு நினைப்பு

சோஷியல் மீடியா

உன் நல்லதுக்கு தான் சொல்றேன். Social மீடியா பக்கம் கொஞ்ச நாளு தல வெச்சுப் படுக்காத. செம காண்ட்ல இருகாணுங்க எல்லாரும்.

English summary
Arthi who is back from Big Boss house has tweeted. Tweeples still troll her for her behaviour in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil