»   »  சிங்கப்பூர் கிளம்பவிருக்கும் விஜயகாந்த் - நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

சிங்கப்பூர் கிளம்பவிருக்கும் விஜயகாந்த் - நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர் நேற்று சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகர் சங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். அசோக் குமார் தற்கொலையால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னைகள் நிலவி வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

விஜயகாந்த் உடல்நிலை

விஜயகாந்த் உடல்நிலை

பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதற்குப் பிறகும், அவர் நீண்டகாலமாக ஓய்வெடுத்து வருகிறார்.

விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்

விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்

இந்நிலையில் விஜயகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அட்மிட் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தே.மு.தி.க அறிக்கை

தே.மு.தி.க அறிக்கை

"விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒருவாரத்துக்குள் செல்லவுள்ளார்" என தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நாசர் சந்திப்பு

நாசர் சந்திப்பு

இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலையால் , தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கோஷ்டிகளாகப் பிரிந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நடிகர் சங்கத் தலைவர்

நடிகர் சங்கத் தலைவர்

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் நடிகர் சங்கத்தின் கடன்களை அடைத்து சிறப்பாக நிர்வகித்தார். அதனால், அவரிடம் ஆலோசனைகள் பெறுவதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

English summary
South indian artiste association president nassar and officials met DMDK president Vijayakanth Yesterday. Vijayakanth is going to singapore for his regular medical checkup on this week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil