»   »  நடிகர்கள் கரையான்கள், எங்கள் பேச்சைக் கேட்காதீங்க: நடிகர் நானா படேகர்

நடிகர்கள் கரையான்கள், எங்கள் பேச்சைக் கேட்காதீங்க: நடிகர் நானா படேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாங்கள் நடிகர்கள் எல்லாம் கரையான்கள், மக்கள் எங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் மிரட்டலுக்கு பயந்து மும்பையில் இருந்த பாகிஸ்தான் கலைஞர்கள் நாடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என சல்மான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பாலிவுட் நடிகர் நானா படேகர் கூறுகையில்,

பாகிஸ்தான் கலைஞர்கள்

பாகிஸ்தான் கலைஞர்கள்

பாகிஸ்தான் கலைஞர்கள் முக்கியம் இல்லை. நமக்கு நம் நாடு தான் முக்கியம். எனக்கு என் நாட்டை தவிர வேறு எதுவும் தெரியாது. தேசத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் கலைஞர்கள் எல்லாம் வெறும் கரையான்கள்.

நடிகர்கள்

நடிகர்கள்

நடிகர், நடிகைகள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாதவர்கள். நாடு தான் முக்கியம். நான் இரண்டரை ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் இருந்திருக்கிறேன்.

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

ராணுவத்தில் இருந்ததால் எல்லையில் போராடும் நம் ஜவான்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்பது எனக்கு தெரியும். உலகின் பெரிய ஹீரோக்கள் நம் ராணுவ வீரர்கள்.

மக்கள்

மக்கள்

நாங்கள் நடிகர்கள் ஒன்றும் உண்மையான ஹீரோக்கள் கிடையாது. மக்கள் நடிகர்களாகிய நாங்கள் சொல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. எங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கேட்கக் கூடாது

கேட்கக் கூடாது

பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றி நடிகர்கள் கூறுவதை கேட்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அது தேவையே இல்லை.

English summary
Nana Patekar has lashed out against Bollywood for supporting Pakistani actors after the Uri attack and said that the nation always comes first to everyone. Nana also unleashed fury and said people should not listen to what actors say as they are just ordinary and useless people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil