அருவா ப்ராஜெக்ட்டை மீண்டும் கையில் எடுக்கும் சூர்யா... வணங்கானை கைவிட இதுதான் காரணமா?

சென்னை: சூர்யா தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே பாலா இயக்கத்தில் சூர்யா ந்டித்து வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி மீண்டு இணையவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 டிராப் ஆன வணங்கான்

டிராப் ஆன வணங்கான்

சூர்யா தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் சூர்யா நடித்து வந்தார். சூர்யா தயாரித்து அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் வணங்கான் படப்பிடிப்பு தொடராமல் இருந்து வந்த நிலையில், தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

 மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி

மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி

இதுதொடர்பாக பாலா தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும், சூர்யாவிடம் இருந்து ஒரு அறிக்கையும் வெளியானது. அதில், வணங்கான் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், அது சூர்யாவுக்கு செட் ஆகாது என பாலா தெரிவித்திருந்தார். அதேநேரம், விரைவில் இன்னொரு கதையில் சூர்யாவுடன் இணைவேன் எனவும் பாலா கூறியிருந்தார். இந்நிலையில், பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா, மீண்டும் ஹரியுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 சூர்யா - ஹரி கூட்டணியில் அருவா?

சூர்யா - ஹரி கூட்டணியில் அருவா?

ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இந்தக் கூட்டணி, அடுத்து சிங்கம் 4ம் பாகத்தில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கான கதையை ஹரி எழுதி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது சூர்யா - ஹரி கூட்டணி, அருவா படத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்பே சூர்யாவுக்காக அருவா படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தார் ஹரி. ஆனால், அந்தப் படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே டிராப் ஆனது.

 விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

இந்நிலையில், வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்ட சூர்யா, அடுத்து ஹரியின் அருவா படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம். இதனால், ஹரியும் அருவா படத்தின் திரைக்கதையை எழுதி வருவதாகக் கூறப்படுகிறது. சூர்யா - ஹரி கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் அடித்துள்ளதால், இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், அருவா படத்தின் ஷூட்டிங் உட்பட அடுத்தக்கட்ட அப்டேட்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X